தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: வங்கதேசத்துக்கு எதிராக மோதும் ஆப்கான்.! வெற்றிப்பயணத்தை தொடருமா?

Asia cup 2022: வங்கதேசத்துக்கு எதிராக மோதும் ஆப்கான்.! வெற்றிப்பயணத்தை தொடருமா?

Aug 30, 2022, 05:38 PM IST

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரில் மூன்றாவது போட்டி ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையே ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் அணி களம் இறங்குகிறது.
ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரில் மூன்றாவது போட்டி ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையே ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் அணி களம் இறங்குகிறது.

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடரில் மூன்றாவது போட்டி ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையே ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் அணி களம் இறங்குகிறது.

கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக இருந்தபோது பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா என டாப் அணிகளை முக்கியமான ஆட்டங்களில் வெற்றிகண்டு தற்போது சர்வதேச அளவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்ட அணி வங்கதேசம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

இரண்டு முறை ஆசிய கோப்பை இறுதி வரை சென்று உலகக் கோப்பை வென்ற அணிகளான பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு பெரும் சாவல் விடுக்கும் அணியாக தன்னை நிருபித்தது.வங்கதேசம் அணி சர்வதேச அளவில் கவனம் பெற்றது போல் தற்போது ஆப்கானிஸ்தான் அணியும் அதே பாணியில் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாகவும், எதிரணியினரை கதிகலங்க செய்யும் விதமாகவும் சில போட்டிகளில் ஜொலித்து வருகிறது.

இதற்கு சிறந்த உதாரணமாக ஆசிய கோப்பை 2022 முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் பெளலிங், பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் பெற்றது. இந்த வெற்றி ப.யணத்தை இன்றைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தொடரும்பட்சத்தில் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணி தகுதி பெற்றுவிடும்.

இதுவரை இரு அணிகளும் 8 முறை டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 5 முறை ஆப்கானிஸ்தானும், 3 முறை வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது.

வங்கதேசம் அணிக்கு ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேட்ச் வின்னரான இவருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே ஒப்பந்தம் தொடர்பாக முரண்பாடு இருந்தது. இதனால் ஷகின் அல் ஹசன் தேசிய அணியில் இணைந்து விளையாடுவதில் சிக்கல் எழுந்தது. அந்த விவகாரத்தில் தீர்வு காணப்பட்ட நிலையில் ஷகிப் அல் ஹசன் அணிக்கு திரும்பியிருப்பதோடு, கேப்டனாக செயல்படவுள்ளார்.

சீனியர் வீரர் லிட்டன் தாஸ் உள்பட சில காயம் அடைந்திருக்கும் நிலையில், அனுபவ வீரரான ஷகிப் அல் ஹசன் அணியை வழிநடத்த இருப்பது அணிக்கு புத்துயில் அளிக்கும் விதமாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் ஃபசல்ஹக் ஃபரூக்கி அற்புதமாக பந்து வீசி இலங்கை அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இதனால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

அடுத்த செய்தி