தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: இந்திய அணி இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமனம்

Asia cup 2022: இந்திய அணி இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமனம்

Aug 25, 2022, 11:07 AM IST

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமிகப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமிகப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமிகப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் அதற்கான சிகிச்சையில் இருந்து வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

இதன் காரணமாக அவர் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவில்லை. திராவிட் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்ட பிறகு அணியில் இணைந்துகொள்வார் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்‌ஷ்மன் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஆசிய கோப்பை முன்னர் கடந்த வாரம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு விவிஎஸ் லக்‌ஷ்மன்தான் பயிற்சியாளராக செயல்பட்டார். இந்த தொடரில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்பட முக்கிய வீரர்களுக்கும், தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையுடன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறது.

டி20 தொடராக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கொரோனா காரணமாக இந்திய அணியில் இணைய முடியாத நிலையில், ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்ட விவிஎஸ் லக்‌ஷ்மன், ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிகப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி