தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: முதல் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் மோதல்

Asia cup 2022: முதல் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் மோதல்

Aug 27, 2022, 04:54 PM IST

15வது ஆசிய கோப்பை தொடர் துபாயில் இன்று தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
15வது ஆசிய கோப்பை தொடர் துபாயில் இன்று தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

15வது ஆசிய கோப்பை தொடர் துபாயில் இன்று தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதுவரை மொத்தம் 14 ஆசிய கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ள முடிந்துள்ள நிலையில் இந்தியா 7 முறை இந்தக் கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

Italian Open Tennis: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் விளையாட தயாராக இருக்கும் வீராங்கனைகள்!

இந்த முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 போட்டிகளாக நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக இவ்வாறு நடைபெறும் நிலையில், 2016ஆம் முதல் முறையாக டி20 போட்டிகளாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை இந்தியா வென்றது.

இந்த தொடர் 2020ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் பின்னர் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இந்த முறை ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ள நிலையில் இந்த அணிகள் தங்களுக்குள் ஒரு போட்டியில் மோதிக்கொள்ளும்.

இதன்பின்னர் இதிலிருந்து ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 அணிகள் சூப்பர் 4 சுற்றில் பங்கேற்கும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்கும்.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் இலங்iகை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை இவ்விரு அணிகளும் டி20 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே மோதிக்கொண்ட நிலையில், அந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

அத்துடன் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னர் ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை இம்மாத தொடக்கத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-3 என்ற கணக்கில் தோல்வியுற்றது.

இரு அணிகளும் தங்களது முந்தைய தொடர்களில் தோல்வி பெற்றுள்ள நிலையில், வெற்றிக்கணக்கை தொடங்கு போராடுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் விவரம்:

இலங்கை: ஷனகா (கேப்டன்), குணதிலகா, பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, அஷென் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசரங்கா, தீக்‌ஷனா, ஜெப்ரி வண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, சமிகா கருணாரத்னே, தில்ஷன் மதுஷனகா, மதீஷா பதிராணா, நுவானிது பெர்னாண்டோ, தினேஷ் சன்டிமால்.

ஆப்கானிஸ்தான்: முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், அப்சர் ஷசாய், அஸ்மத்துல்லா ஒமர்ஷாய், பரித் அகமது மாலிக், பாசல் ஹக் பரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷகிடி, ஹஸ்ரத்துல்லா ஷசாய், இப்ராகிம் ஜட்ரன், கரிம் ஜனத், முஜீப் ரகுமான், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரமனுல்லா குர்பாஸ், ரஷித்கான், சமியுல்லா ஷின்வாரி, உஸ்மான் கானி.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி