தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: இலங்கையை மீட்ட ராஜபட்சே! 6வது முறையாக ஆசிய கோப்பை வெற்றி

Asia cup 2022: இலங்கையை மீட்ட ராஜபட்சே! 6வது முறையாக ஆசிய கோப்பை வெற்றி

Sep 12, 2022, 05:46 PM IST

google News
இலங்கை பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் எடுக்க தவறி அடுத்தடுத்து பெவிலியன் திரும்யபோது, அணியை சரிவிலிருந்து மீட்டதோடு சவாலான இலக்கை நிர்ணயிக்க காரணமாக அமைந்தது பனுக்க ராஜபட்சே வெளிப்படுத்திய அற்புதமான பேட்டிங். (ICC Twitter)
இலங்கை பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் எடுக்க தவறி அடுத்தடுத்து பெவிலியன் திரும்யபோது, அணியை சரிவிலிருந்து மீட்டதோடு சவாலான இலக்கை நிர்ணயிக்க காரணமாக அமைந்தது பனுக்க ராஜபட்சே வெளிப்படுத்திய அற்புதமான பேட்டிங்.

இலங்கை பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் எடுக்க தவறி அடுத்தடுத்து பெவிலியன் திரும்யபோது, அணியை சரிவிலிருந்து மீட்டதோடு சவாலான இலக்கை நிர்ணயிக்க காரணமாக அமைந்தது பனுக்க ராஜபட்சே வெளிப்படுத்திய அற்புதமான பேட்டிங்.

துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சேஸிங் செய்த அணிகள் மட்டுமே வென்ற துபாய் மைதானத்தில் முதல் பேட்டிங் செய்து வெற்றி பெற்றிருப்பது இன்னும் சிறப்பாக அமைந்தது.

60 ரன்களுக்குள் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்த தவித்த இலங்கை அணியை மீட்டர் இடது கை பேட்ஸ்மேனான் பனுக்கா ராஜபட்சே. தொடக்கத்தில் நிதானமும், பின்னர் கடைசி நேரத்தில் அதிரடியும் காட்டிய அவர் 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் மட்டுமே இழந்து 170 ரன்கள் குவித்தது.

இந்த டார்கெட்டை சேஸ் செய்த பாகிஸ்தான் அணியில் பார்மில் இருக்கும் முகமது ரிஸ்வான், இஃப்திகர், ஹரிஷ் ராஃப் ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர் முழுவதும் சிறப்பாக பேட் செய்த ரிஸ்வான் 55, இஃதிகர் அஹமத் 32, ஹரிஷ் ராஃப் 13 ரன்களை எடுத்தனர்.

20 ஓவர் முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்றாவது முறையாக ஆசிய கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது பாகிஸ்தான். இதையடுத்து இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 6வது முறையாக ஆசிய கோப்பை தொடரை வென்று சாதனை புரிந்துள்ளது.

அணியை சரிவில் இருந்து மீட்ட பனுக்கா ராஜபட்சே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்கிய ஹசரங்கா டி சில்வா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மொத்த 6 போட்டிகள் விளையாடி பேட்டிங்கில் 66 ரன்களை எடுத்த இவர், பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த தொடரில் மொத்தமாக விளையாடிய 6 போட்டிகளில் இலங்கை அணி 5இல் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த செய்தி