தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: சிக்ஸருடன் பினிஷ்… பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி!

Asia cup 2022: சிக்ஸருடன் பினிஷ்… பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி!

Aug 29, 2022, 12:38 AM IST

google News
தோனி விட்டு சென்ற சிக்ஸர் பினிஷிங்கை தற்போது ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் கிடைக்கும் வாய்ப்புகளில் பயன்படுத்து வருகிறார்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மிகவும் அமைதியாகவும், கூர்மையாகவும் பந்து எதிர்கொண்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டயா சிக்ஸருடன் ஆட்டத்தை பினிஷ் செய்தார். (AP)
தோனி விட்டு சென்ற சிக்ஸர் பினிஷிங்கை தற்போது ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் கிடைக்கும் வாய்ப்புகளில் பயன்படுத்து வருகிறார்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மிகவும் அமைதியாகவும், கூர்மையாகவும் பந்து எதிர்கொண்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டயா சிக்ஸருடன் ஆட்டத்தை பினிஷ் செய்தார்.

தோனி விட்டு சென்ற சிக்ஸர் பினிஷிங்கை தற்போது ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் கிடைக்கும் வாய்ப்புகளில் பயன்படுத்து வருகிறார்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மிகவும் அமைதியாகவும், கூர்மையாகவும் பந்து எதிர்கொண்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டயா சிக்ஸருடன் ஆட்டத்தை பினிஷ் செய்தார்.

இந்த ஆட்டத்தின் மீது இன்று உலகம் முழுவதும் உள்ள அனைவரின் கண்களும் இருக்கும் என்பதை குறிப்பிடும் விதமாக பல்வேறு மீம்களோடு இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்த பில்ட்அப்புகள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்தன.அத்துடன் விராட் கோலி களமிறங்கும் 100வது டி20 ஆட்டமாக இந்த போட்டி அமைந்த நிலையில் மற்றொரு சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது.

திட்டமிட்டமடி இன்றைய ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்க டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பெளலிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் அஸ்வின் களமிறக்கப்படவில்லை.

ஸ்பின்னராக சஹால், ஆவேஷ் கான், ஹர்ஷ்தீப் சிங், புவனேஷ் குமார் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா என ஆல்ரவுண்டர்களுடன் மொத்தம் ஆறு பெளலிங் ஆப்ஷனுடன் இந்திய களமிறங்கியது.

ஒரு புறம் விக்கெட்கள் சாய்ந்தாலும், மறுபுறத்தில் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். 18.3 ஓவரில் 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி இழந்தது. ஆனால் கடைசி பேட்ஸ்மேனாக வந்த ஷநவாஸ் தஹானி 2 சிக்ஸர்கள் அடித்து அணியின் ஸ்கோர் 147 என உயர காரணமாக அமைந்தார். 19.4 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களில் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குபிடித்து அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக இஃப்திகர் அஹமத் எடுத்த 20 ரன்களே இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்பார்ம் பேட்ஸ்மேனும், பாகிஸ்தான் அணி கேப்டனுமான பாபர் அசாம் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்திய பெளலிங்கில், ஸ்டிரைக் பெளலரான புவனேஷ்வர் குமார் ரன்களையும் நன்கு கட்டுப்படுத்தி வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு அடுத்தபடியாக பாண்ட்யா 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்பின்னர்களான சஹால், ஜடேஜா ஆகியோர் விக்கெட்டுகள் ஏதும் வீழ்த்தவில்லை.

அணியில் சேர்க்கப்பட்ட ஆறு பந்து வீச்சாளர்களையும் கேப்டன் ரோஹித் ஷர்மா பயண்படுத்தி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

இதன் பிறகு 148 ரன்கள் என்ற சேஸை விரட்டிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரர் நாசிம் ஷா வீசிய பந்தில் தான் பேட் செய்த முதல் பந்திலேயே போல்டு ஆகி வெளியேறினார் கேஎல் ராகுல். இதன் பின்னர் களமிறங்கிய கோலி தனது ஸ்டைல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரோஹித்தும் அவருக்கு கம்பென் கொடுக்க ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. பின் ஒரே ஓவரில் ரோஹித் 12, கோலி 35 ரன்கள், ஆகியோரின் விக்கெட்டுகளை தூக்கினார் இடது கை ஸ்பின்னரான முகமது நவாஸ். 53 ரன்களில் 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில் சர்ப்ரைஸாக ஜடேஜா களமிறங்கினார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் ஒரே இடது கை பேட்ஸ்மேனான அவர், வந்தவுடன் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தின் நிலைமையை கூலாக்கினார்.

மறுபக்கம் நன்றாக பேட் செய்து வந்த சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில், புதிய வீரர் நாசிம் ஷா போல்டாக ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின் ஹர்திக் பாண்ட்யா உள்ளே வர ஒன்று, இரண்டு என மெல்ல மெல்ல ஸ்கோர் உயர்ந்தது.

கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் பாகிஸ்தான் அணியின் துருப்பு சீட்டாக இருந்த அறிமுக வீரர் நாசிம் ஷா, காலிலு சுளுக்கு ஏற்பட்ட நிலையிலும் பந்து வீசி நெருக்கடி அளிக்க முயற்சித்தார். ஆனால் அந்த ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார் பாண்டாய்.

இதையடுத்து இறுதி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் 35 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா போல்டாகி வெளியேறினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை பினிஷ் செய்தார் பாண்ட்யா.

முதல் பேட்டிங்கோ, சேஸிங்கோ சிக்ஸருடன் ஆட்டத்தை முடிக்கும் ஸ்டைலை தோனி தொடர்ச்சியாக பல ஆட்டங்களில் செய்து வந்தார். தற்போது அதன் மற்ற வீரர்களும் கடைப்பிடித்து வரும் நிலையில், இம்முறை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக அதை செய்துள்ளார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்திருந்தார்.

பெளங்கில் 3 விக்கெட், பேட்டிங்கில் கடைசி வரை நின்று ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி பெற உதவிய பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை தொடரிலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது இந்தியா அணி.

அடுத்த செய்தி