தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: ஹாங்காங் அணியை கதறவிட்ட பாக். பெளலர்கள்! 155 ரன்களில் வெற்றி

Asia cup 2022: ஹாங்காங் அணியை கதறவிட்ட பாக். பெளலர்கள்! 155 ரன்களில் வெற்றி

Sep 02, 2022, 11:20 PM IST

google News
போன் நம்பர் போன்ற ஸ்கோர்போர்டு, இரட்டை இலக்கத்தில் எக்ஸ்ட்ராஸ், டி20 கிரிக்கெட்டில் மிகவும் குறைவான ஸ்கோர் என பாகிஸ்தான் - ஹாங்காங் இடையேயான போட்டியில் பல்வேறு சுவாரஸ்யங்களும், சாதனைகளும் உள்ளன. 155 ரன்கள் வித்தியாசத்தில் இமலாய வெற்றியுடன் சூப்பர் 4 சுற்றுக்கு நுழைந்துள்ளது பாகிஸ்தான். (AP)
போன் நம்பர் போன்ற ஸ்கோர்போர்டு, இரட்டை இலக்கத்தில் எக்ஸ்ட்ராஸ், டி20 கிரிக்கெட்டில் மிகவும் குறைவான ஸ்கோர் என பாகிஸ்தான் - ஹாங்காங் இடையேயான போட்டியில் பல்வேறு சுவாரஸ்யங்களும், சாதனைகளும் உள்ளன. 155 ரன்கள் வித்தியாசத்தில் இமலாய வெற்றியுடன் சூப்பர் 4 சுற்றுக்கு நுழைந்துள்ளது பாகிஸ்தான்.

போன் நம்பர் போன்ற ஸ்கோர்போர்டு, இரட்டை இலக்கத்தில் எக்ஸ்ட்ராஸ், டி20 கிரிக்கெட்டில் மிகவும் குறைவான ஸ்கோர் என பாகிஸ்தான் - ஹாங்காங் இடையேயான போட்டியில் பல்வேறு சுவாரஸ்யங்களும், சாதனைகளும் உள்ளன. 155 ரன்கள் வித்தியாசத்தில் இமலாய வெற்றியுடன் சூப்பர் 4 சுற்றுக்கு நுழைந்துள்ளது பாகிஸ்தான்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் பாகிஸ்தான் - ஹாங்காங் இடையே ஷார்ஜாவில் நடைபெற்றது. சிறிய மைதானமான இங்கு பவுண்டரி மழை பொலியலாம் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பெளலிங்கை தேர்வு செய்தது.

உச்சகட்ட பார்மில் இருந்த பாபர் அசாமின் ஆட்டம் இந்திய அணியை தொடர்ந்து ஹாங்காங் அணிக்கு எதிரான இந்தப் போட்டியிலும் சொதப்பலாக அமைந்தது. 9 ரன்னில் அவர் நடையை கட்ட, அவருக்கு அடுத்தபடியாக வந்த ஃபஹர் ஸமான் மற்றும் ஓபனிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பாக பார்னர்ஷிப் அமைத்தனர்.

இரண்டாவது விக்கெட்டு இந்தக் கூட்டணி 116 ரன்கள் சேர்த்தது. ஸ்மான் 53 ரன்கள் எடுத்து அவுட்டாக, கடைசி நேரத்தில் வந்த குஷ்தில் ஷா வாணவேடிக்கை நிகழ்த்தி அணியின் ஸ்கோர் 193 என உயர காரணமாக இருந்தார்.

15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த இவர் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஓபனிங் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஸ்வான் 78 ரன்கள் எடுத்திருந்தார்.

194 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை விரட்டுவதற்கான எந்த முயற்சியிலும் ஹாங்காங் பேட்ஸ்மேன்கள் எடுக்கவில்லை. அடித்து ஆடுகிறேன் பேர்வழி என தேவையில்லாமல் தவறான ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை வீணாக பறிகொடுத்தனர்.

பாகிஸ்தான் பெளலர்கள் விக்கெட்டுக்கென எந்த மெனக்கெடலிலும் ஈடுபடவில்லை. மாறாக பேட்ஸ்மேன்களை எளிமையான பந்துகளிலும் தவறான ஷாட்களை விளையாடி விக்கெட்டுகளை இழந்தனர்.

எந்தவொரு பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்துக்கு வராத நிலையில் ஹாங்காங் அணியின் ஸ்கோர்போர்ட்டு போன் நம்பர் போல் இருந்தது. இறுதியில் ஹாங்காங் அணிக்காக இரட்டை இலக்கத்தை பாகிஸ்தான் பெளலர்களே எக்ஸ்ட்ராஸ் மூலம் கொண்டு வந்தனர்.

10.4 ஓவரில் 38 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஹாங்காங். இதில் பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்ட ரன்கள் 28 மட்டும்தான். மீதமுள்லள 10 ரன்கள் எக்ஸ்ட்ராவாக அமைந்தது. அதுவும் எக்ஸ்ட்ராக்கள் மட்டும்தான் ஹாங்காங் ஸ்கோர்போர்டில் இரட்டை இலக்கத்தில் உள்ளது.

பாகிஸ்தான் பெளலர்கிள் ஷதாப் கான் 4, முகமது நவாஸ் 3, நாசிம் ஷா 2, ஷாநவாஸ் தஹானி 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

155 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பதோடு, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மீண்டும் விளையாடவுள்ளது.

ஹாங்காங் எடுத்துள்ள 38 என்ற ஸ்கோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. தொடக்கத்தில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகமல் இருந்த ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி