தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022, Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்

Asia Cup 2022, IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்

Karthikeyan S HT Tamil

Sep 04, 2022, 12:00 PM IST

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் 15வது சீசன் 'டி-20' தொடராக ஐக்கிய அரபு அமீரகத்தில் 27ஆம் தேதியன்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் சூப்பா் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா 33 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதேபோல், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் ஜடேஜா 35 ரன்கள் எடுத்து இருந்தனர். பந்துவீச்சில் மிரட்டிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாா்.

தற்போது, 2ஆவது முறையாக இவ்விரு அணிகளும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் அணியானது முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதில் தீவிரம் காட்டக்கூடும். இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

டாபிக்ஸ்