தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: பாக். அணிக்கு எதிராக சாதனை புரிந்த இந்திய வேகபந்து வீச்சாளர்கள்

Asia cup 2022: பாக். அணிக்கு எதிராக சாதனை புரிந்த இந்திய வேகபந்து வீச்சாளர்கள்

Aug 29, 2022, 07:17 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர், அத்துடன் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். (PTI)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர், அத்துடன் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர், அத்துடன் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பெளலிங், பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யாவின் சிக்ஸர் மூலம் த்ரில் வெற்றியை பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 147 ரன்களுக்கு காலி செய்தனர் இந்திய பெளலர்கள். இதில் சிறப்பு அம்சமாக பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட்டில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, ஆகஸ்ட் 7ஆம் தேதி வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இந்திய ஸ்பின்னர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதுபோன்ற நிகழ்வை இந்திய முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் நிகழ்த்தியது.

இதைத்தொடர்ந்து தற்போது துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ராஜ்ஜியம் நிகழ்த்தியுள்ளனர். இதுவும் முதல் முறையாக இந்தியா சார்பில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் இந்த 12 ரன்கள் எடுத்துள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் கப்திலை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார்.

இதுவரை 133 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக 3,497 ரன்களுடன் கப்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 3,343 ரன்களுடன் உள்ளார்.

 

அடுத்த செய்தி