தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: யுவராஜ் சாதனை முறியடிப்பு, தோனி சாதனை சமன் செய்த பாண்ட்யா!

Asia cup 2022: யுவராஜ் சாதனை முறியடிப்பு, தோனி சாதனை சமன் செய்த பாண்ட்யா!

Aug 30, 2022, 10:40 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பினிஷ் செய்து ஆட்டநாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்ட்யா, தனது அசத்தலான ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் யுவராஜ் சிங் சாதனையை முறியடித்ததோடு மட்டுமில்லாமல், தோனி நிகழ்த்திய மற்றொரு சாதனையும் சமன் செய்துள்ளார். (AP)
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பினிஷ் செய்து ஆட்டநாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்ட்யா, தனது அசத்தலான ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் யுவராஜ் சிங் சாதனையை முறியடித்ததோடு மட்டுமில்லாமல், தோனி நிகழ்த்திய மற்றொரு சாதனையும் சமன் செய்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பினிஷ் செய்து ஆட்டநாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்ட்யா, தனது அசத்தலான ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் யுவராஜ் சிங் சாதனையை முறியடித்ததோடு மட்டுமில்லாமல், தோனி நிகழ்த்திய மற்றொரு சாதனையும் சமன் செய்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையோன போட்டி தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் ஜொலித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார் ஹர்திக் பாண்ட்யா. கடைசி நேரத்தில் மிகவும் கூலாக பேட் செய்து சிக்ஸருடன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian Open of Surfing: இந்தியன் ஓபன் சர்ஃபிங்கின் 5வது எடிஷன் மே 31 முதல் தொடங்குகிறது

Thailand Open Badminton: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் சாம்பியன்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

அந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த பாண்ட்யா, பெளலிங்கின் போது 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் யுவராஜ் சிங் நிகழ்த்திய சாதனையை அவர் முறியடித்துள்ளார். டி20 போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் எடுத்து 3 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் இரண்டு முறை எடுத்திருந்தார்.

ஏற்கனவே இதே போல் 30 ரன்களும், 3 விக்கெட்டுகளும் இரண்டு முறை எடுத்து யுவராஜின் சாதனையை சமன் செய்திருந்த பாண்ட்யா, மூன்றாவது முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மீண்டும் நிகழ்த்தி அதனை முறியடித்துள்ளார்.

இதேபோல் டி20 போட்டிகளில் 16 முதல் 20 ஓவர் வரை அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் தோனி 34 சிக்ஸர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார். இதையடுத்து பாண்ட்யாவும் தற்போது 34 சிக்ஸர்கள் விளாசி தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக 31 சிக்ஸர்கள் விளாசி யுவராஜ் சிங் உள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி