தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Cup 2022: பாக். அணியில் மற்றொரு வீரர் காயத்தால் விலகல்! ஹசன் அலி சேர்ப்பு

Asia cup 2022: பாக். அணியில் மற்றொரு வீரர் காயத்தால் விலகல்! ஹசன் அலி சேர்ப்பு

Aug 27, 2022, 06:23 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த மற்றொரு நட்சத்திர வீரர் காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த மற்றொரு நட்சத்திர வீரர் காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த மற்றொரு நட்சத்திர வீரர் காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக, வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Thailand Open 2024: நான்காவது இறுதி போட்டி! சீனா தைபே ஜோடியை வீழ்த்திய சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி

Boxing: 18 மாதம் இடைநீக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் இடத்தை பறிகொடுக்கும் 57 கிலோ எடைப்பிரிவு வீராங்கனை பர்வீன் ஹூடா

Sunil Chhetri announces retirement: ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி.. கடைசி போட்டி இதுதான்

Italian Open: இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்ய முன்னணி வீரர் தோல்வி

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மற்றொரு வீரரான முகமது வாசிம் முதுகுவலி காரணமாக விலகியுள்ளார். பெளலிங் ஆல்ரவுண்டரான இவர் கடைசி கட்டத்தில் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

ஆனால் துபாயில் பயிற்சி மேற்கொண்டபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் பந்து வீச்சை தொடர முடியாமல் அவர் தவித்து வந்தார். பின்னர் அவர் பிஸியோதெரபிஸ்டிடம் ஆலோசனை பெற்று வெளியேறியுள்ளார்.

முகமது வாசிமுக்கு பதிலாக ஹசான் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவரும் பெளலிங் ஆல்ரவுண்டராக இருப்பதுடன் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதுவரை 49 டி20 போட்டிகள் விளையாடி 60 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல சராசரியும் வைத்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிய துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நாளை நடைபெறுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி