தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asia Champions Trophy Hockey 2023: முதல் நாளில் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி! பாகிஸ்தான் தோல்வி

Asia Champions Trophy Hockey 2023: முதல் நாளில் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி! பாகிஸ்தான் தோல்வி

Aug 04, 2023, 07:49 AM IST

google News
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, தென்கொரியா, மலேசியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளது. (AFP)
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, தென்கொரியா, மலேசியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, தென்கொரியா, மலேசியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளது.

ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் வைத்து தொடங்கியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதையடுத்து முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் அட்டாக் ஆட்டம் விளையாடிய தென்கொரியா இரண்டாவது கோல் அடித்தது. இதன் பின்னர் முழு ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணி வெற்றி பெற்றது.

முதல் நாளில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மலேசியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தும் விதமாக விளையாடிய மலேசியா 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

நீண்ட போராட்டத்துக்கு பின் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி முதல் கோல் அடித்தது. இந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியா அணி வெற்றி பெற்றது.

முதல் நாளில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் பலப்பரிச்சை செய்தன. ஆட்டத்தின் 5 மற்றும் 8 ஆகிய நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அதை கோலாக மாற்றினார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங், 16வது நிமிடத்தில் ஆகாஷ்தீப்சிங், 19 மற்றும் 30வது நிமிடத்தில் வருண்குமார், 40வது நிமிடத்தில் மன்தீப்சிங் ஆகியோரும் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர். இது தவிர இரு பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்திய வீரர்கள் வீணாக்கினர்.

சீனா அணி ஆட்டத்தின் 18, 25 நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தன. இந்த போட்டியின் முழு ஆட்ட நேர முடிவில் முடிவில் இந்தியா 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.

இந்திய அணியில் இடம்பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த சேர்ந்த எஸ்.கார்த்தி மாற்று வீரராக 33வது நிமிடத்தில் இறங்கினார். ஆனால் அவர் கோல் ஏதும் போடவில்லை.

இன்றைய நடைபெறும் லீக் ஆட்டங்களில் மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் தென்கொரியா- பாகிஸ்தான், மாலை 6.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் சீனா-மலேசியா, இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி