Ashes 2023, Eng vs Aus: என்ன செய்வதென்றே தெரியாமல் அவுட்டான இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் - முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா
Jun 30, 2023, 06:01 PM IST
ஆஸ்திரேலியா பவுலிங்கை சமாளிக்கை முடியாமல் இங்கிலாந்தின் டெயில் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்த நிலையில் கூடுதலாக 47 ரன்கள் மட்டும் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அதிகபட்ச ஸ்கோராக 110 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து பவுலர்களில் ராபின்சன், டங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோ ரூட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இங்கிலாந்து ஸ்டிரைக் பவுலர்களான ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி ப்ரூக் 45, ஸ்டோக்ஸ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இங்கிலாந்து கூடுதலாக 47 ரன்கள் மட்டும் அடித்த நிலையில் எஞ்சியிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது.
இன்றைய நாளின் தொடக்கத்திலேயே ஸ்டோக்ஸ் 17 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக பேட் செய்து வந்த ப்ரூக் 50 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்தின் டெயில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் வீழ்ந்தனர். இதனால் 325 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 98 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை கோட்டை விட்டார். இவருக்கு அடுத்தபடியாக ப்ரூக் 50, க்ராவ்லி 48, போப் 42 ரன்கள் எடுத்தனர். முதல் போட்டியில் சதமடித்த 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முன்னதாக பீல்டிங்கின் போது மைதானத்தினுள் நுழைந்து ஆட்டத்தில் இடையூறு செய்த நபரை குண்கட்டாக தூக்கி கிளாப்ஸ்களை அள்ளினார் பேர்ஸ்டோ. ஆனால் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காமல் போனார்.
அத்துடன் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா பவுலர்களில் ஸ்டார்க் 3, ஹசில்வுட் மற்றும் ஹெட் 2, லயன், க்ரீன், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அணி தற்போது முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்