தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asain Games 2023: சிங்கப்பூருக்கு எதிராக கோல் மழை! 16-1 என்ற கணக்கில் இரண்டாவது வெற்றி! அடுத்த போட்டி யாருடன்?

Asain Games 2023: சிங்கப்பூருக்கு எதிராக கோல் மழை! 16-1 என்ற கணக்கில் இரண்டாவது வெற்றி! அடுத்த போட்டி யாருடன்?

Sep 26, 2023, 05:27 PM IST

google News
உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை தொடர்ந்து மீண்டும் 16 கோல்கள் அடித்து இரண்டாவது வெற்றியை இந்திய அணி ருசித்துள்ளது. (PTI)
உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை தொடர்ந்து மீண்டும் 16 கோல்கள் அடித்து இரண்டாவது வெற்றியை இந்திய அணி ருசித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை தொடர்ந்து மீண்டும் 16 கோல்கள் அடித்து இரண்டாவது வெற்றியை இந்திய அணி ருசித்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவிலுள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி இந்திய 13 பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கிய மூன்றாவது நாளான இன்று இந்தியாவுக்கு படகு போட்டியில் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் கிடைத்துள்ளன. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியுள்ளது.

முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மிகப் பெரிய வெற்றிய பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் 16 கோல்களை அடித்து இந்திய அணி அசத்தியுள்ளது.

இந்திய அணி கேப்டன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், மன்தீப் சிங் ஆகியோர் ஹாட்ரிக் கோல்களை அடித்தனர். ஹர்மன்ப்ரீத் சிங் 24, 39, 40, 42 ஆகிய நிமிடங்களில் இந்தியாவுக்கு கோல் அடித்தார். மன்தீப் சிங் 12, 30, 51 ஆகிய நிமிடங்களிலும்,க அபிஷேக் 51, 52, வருண் குமார் 55, 55, லலித் குமார் உபத்யாய் 16, குர்ஜாந்த் சிங் 22, விவேக் சாகர் பிரசாத் 23, மன்ப்ரீத் சிங் 37, ஷாம்ஷெர் சிங் 38 ஆகிய நிமிடங்களில் கோல்களை அடித்தனர்.

இந்தியா தனது அடுத்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்கொள்கிறது. சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதல் கடைசி வரை இந்திய வீரர்கள் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தினர். 15 நிமிடத்தில் 5 கோல்களை அடித்து இந்திய வீரர்கள் அசத்தினர்.

இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி கோல் மழை பொலிந்த போதிலும் பொனால்டி கார்னராக கிடைத்த 22 வாய்ப்புகளை 8ஐ மட்டுமே கோல்களாக மாற்றியுள்ளது. எனவே இந்தியா வீரர்கள் பொனல்டி கார்னரை கோல்களாக மாற்றுவது குறித்து தனி கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

ஜப்பான் போன்ற பலம் வாய்ந்த அணியை எதிர்கொள்ளும்போது பெனால்டி கார்னர் கோல்கள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி