BCCI: ஒரு சர்வதேச போட்டி கூட விளையாடியதில்லை! இந்திய மகளிர் அணி புதிய பயிற்சியாளராக தேர்வு! மஜும்தார் செய்த சாதனை என்ன?
Jul 04, 2023, 12:01 PM IST
ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என உள்ளூர் கிரிக்கெட்டில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக பல்வேறு சாதனைகளை புரிந்தாலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படாத அமோல் மஜும்தார் தற்போது இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா உள்ளூர் கிரிக்கெட்டின் ஜாம்பவான் ஆக இருந்தவர் அமோல் மஜும்தார். மும்பை நடைபெற்ற பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் நடைபெற்ற நேர்முக தேர்வில் தேர்வாளார்களை நன்கு கவனிக்க வைத்த மஜும்தார், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
மும்பை ராஞ்சி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், தென்ஆப்பரிக்கா தேசிய அணிக்கும் பேட்டிங் பயிற்சியாளாராக இருந்துள்ளார். நெதர்லாந்து அணியின் பேட்டிங் கன்சல்டன்டாகவும் இருந்து இவர் இந்திய Under 19, Under 23 கிரிக்கெட் அணிகளுக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
ராஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிகாக 1993இல் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மஜும்தார் 2009 வரை 16 ஆண்டுகள் அங்கு விளையாடினார். பின்னர் 2009 முதல் 2011 வரை அஸ்ஸாம் அணிக்கும், 2012 முதல் 2013 வரை ஆந்திர பிரதேசம் அணிக்கும் விளையாடியுள்ளார்.
இவர் இந்திய மகளிர் அணியை மேம்படுத்துவதற்கும், உலகின் மிகவும் வலுவான அணியாக மாற்றுவதற்காக வெளிப்படுத்திய திட்டங்கள் பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனை குழுவை வெகுவாக கவர்ந்த நிலையில், இவரை இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை 171 முதல் தர போட்டிகள் விளையாடி 11,167 ரன்களும், 113 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 3286 ரன்களும் அடித்துள்ளார். இதில் முதல் தர கிரிக்கெட்டில் 30 சதமும், 60 அரைசதமும் விளாசியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் டான் போன்று இருந்து வந்த அமோல் மஜும்தார், இந்திய மகளிர் அணியை புதிய உயரத்துக்கு அழைத்து செல்வார் என்ற எதிர்பார்ப்பு தற்போது பல முன்னாள் வீரர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ரமேஷ் பவால் பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து பயிற்சியாளரே இல்லாமல் வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய மகளிர் அணி.
இதையடுத்து தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் அமோல் மஜும்தாருக்கு இரண்டு வருட ஒப்பந்தம் அளிக்கப்படும் என தெரிகிறது. இந்த காலகட்டத்தில் டி20, 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு ஐசிசி தொடர்களில் இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்