தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Masters Athletics: வயது மூத்தோருக்கான தடகள போட்டி! 86 வயது தமிழ்நாடு வீரர் 4 தங்கம் வென்று அசத்தல்

Asian Masters Athletics: வயது மூத்தோருக்கான தடகள போட்டி! 86 வயது தமிழ்நாடு வீரர் 4 தங்கம் வென்று அசத்தல்

Nov 18, 2023, 03:55 PM IST

google News
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியிஸ் தமிழ்நாட்டை சேர்ந்த 86 வயது மூத்த தடகள வீரர் கே சுப்பிரமணியம் நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியிஸ் தமிழ்நாட்டை சேர்ந்த 86 வயது மூத்த தடகள வீரர் கே சுப்பிரமணியம் நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியிஸ் தமிழ்நாட்டை சேர்ந்த 86 வயது மூத்த தடகள வீரர் கே சுப்பிரமணியம் நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற வயது மூத்தோருக்கான 22வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சூப்பிரமணியம் நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 86 வயதாகும் இவர் நீளம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய விளையாட்டுகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு பதக்கம் வென்றுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் சுப்பு என்று அழைக்கப்படுகிறார். தனது இளவயது முதலே தடகள விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த வாரம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற நிகழ்வில் பதக்கம் வென்று நாடு திரும்பியுள்ளார்.

சுப்பு உள்பட பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து, அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில்," பிலிப்பைன்ஸில் நடைபெற்ற வயது மூத்தோருக்கான 22-ஆவது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில், பல்வேறு பதக்கங்களை குவித்துள்ள நம்முடைய தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளை இன்று நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு விளையாட்டு அவசியம் என்பதையும், விளையாட்டில் சாதிக்க வயதேதும் தடையில்லை என்றும் வெற்றி பெற்றுள்ள, நம் மூத்த விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரிடமும் வெளிப்பட்ட ஆர்வம், நமக்கும் உற்சாகம் தருவதாக அமைந்தது.

இவர்களின் வெற்றி, இளம் வீரர், வீராங்கனையருக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும்." எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்ட சுப்பிரமணியம், அதன் பிரதிபலனாக பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி