Lionel Messi: பிஎஸ்ஜி கிளப் அணி இன்ஸ்டாகிராம் பேஜை அன்ஃபாலோ செய்த 6 லட்சம் மெஸ்ஸி ரசிகர்கள்-காரணம் என்ன?
Jun 05, 2023, 07:53 AM IST
PSG: கடைசி லீக் ஆட்டத்தில் கிளெர்மோன்ட் ஃபூட் அணியிடம் பிஎஸ்ஜி 3-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
பிரான்ஸில் நடைபெற்ற லீக் 1 கால்பந்து லீக் போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றது.
லீக் 1 போட்டியில் பிஎஸ்ஜி வெல்வது 11வது முறையாகும். இந்த சீசனில் பிஎஸ்ஜி மொத்தம் 38 ஆட்டங்களில் விளையாடி 27இல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
மொத்தம் 4 ஆட்டங்களில் தோல்வியும், 4 ஆட்டங்களில் டிராவும் செய்தது பிஎஸ்ஜி.
அந்த அணி 85 புள்ளிகளை பெற்றது. இரண்டாவது லென்ஸ் அணி பெற்றது. அந்த அணி 38 ஆட்டங்களில் விளையாடி 25 இல் வெற்றி பெற்றது. மொத்தம் 84 புள்ளிகளை எடுத்தது.
மூன்றாவது இடத்தில் மார்செய்லே அணி உள்ளது. இந்த அணி 38 ஆட்டங்களில் 22 இல் ஜெயித்தது. மொத்தம் 73 புள்ளிகளைப் பெற்றது.
இந்தப் போட்டி 85வது சீசன் ஆகும். இந்தப் போட்டியுடன் பிஎஸ்ஜி அணியிலிருந்து நட்சத்திர கால்பந்து வீரரான அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி விலகுகிறார்.
கடைசி லீக் ஆட்டத்தில் கிளெர்மோன்ட் ஃபூட் அணியிடம் பிஎஸ்ஜி 3-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெஸ்ஸி கூறியதாவது:
இந்த ஆட்டத்துடன் பிஎஸ்ஜி அணியிலிருந்து விடைபெறுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், பிஎஸ்ஜி நிர்வாகத்திற்கு நன்றி என தெரிவித்தார்.
பிஎஸ்ஜி அணிக்காக இரு சீசன்களில் விளையாடியிருக்கும் மெஸ்ஸி மொத்தம் 32 கோல்களை பதிவு செய்திருக்கிறார். மேலும், 35 கோல்களை சக வீரர்கள் அடிப்பதற்கும் உதவியிருக்கிறார்.
லீக் போட்டிகளில் இதுவரை 496 கோல்களை பதிவு செய்துள்ள மெஸ்ஸி, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளினார்.
ஐரோப்பாவில் டாப் 5 லீக் போட்டிகளில் கோல் மழை பொழிந்தவராக மெஸ்ஸி திகழ்கிறார்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த கிளப் அணிக்காக மெஸ்ஸி ஒப்பந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஎஸ்ஜி அணியில் இருந்து மெஸ்ஸி விடை பெற்றதும் அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சரசரவென குறைந்தது.
கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் அந்த கிளப் அணியை பின்தெடார்வதிலிருந்து பின்வாங்கினர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்