(6 / 6)அப்போதுதான் அரவிந்த் அண்ணன், நாம் எல்லோரும் சேர்ந்து ஷாம், பிரகாஷை உருவாக்கணும்னு சொன்னார். அடுத்து அரவிந்த் அண்ணன்கிட்ட எல்லா எக்யூப்மென்ட்ஸும் இருந்தது. உடனே, ஆபிஸ் போட்டோம். பிரகாஷ் தான் அட்மின், நாம் யோசிக்கிறதை முன்னாடியே யோசித்துசெய்திடுவான்.அந்த டீமில் உண்மையிலேயே அன்பு பியூர் ஆக இருக்கும். அதன்பின் சேர்ந்த கார்த்தி, ஆனந்த், ஷெரிஃப், அன்புதாசன் இப்படின்னு யார் உள்ளே வந்தாலும் லைட் மைண்ட்டட் தான். இது யாரு கொடுத்ததா இருந்தாலும் சிவா கொடுத்ததாகத்தான் நினைக்கிறேன். இன்னிக்கும் நான் எழுந்ததும் பார்க்கிற முதல் முகம் சிவசுப்ரமணியத்தோடது தான்.ஸ்மைல் சேட்டையாக இருந்தப்போ, எனக்குன்னு ஈவன்ட்டுக்கு எல்லாம் கூப்பிடுறாங்க. ஆனால், எனக்காக உழைத்தவங்களுக்கும் கனவு இருக்குன்னு அவங்களையும் அவங்களுக்குப் பிடிச்ச ஜானரில் செய்ய வைச்சேன். நம்ம டீமில் வந்து சேர்பவர்களை ஆடிசன் எல்லாம் எடுக்கமாட்டோம். மாறாக, அவங்க செய்யுறதில் சிறப்பானதை எப்படி ஷோவாக மாத்தலாம்ன்னு யோசிப்போம். அப்படி தான் நிறைய கன்டென்ட் கொடுத்தோம். இப்படி தான் நாங்க வளர்ந்தோம்’’என ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் பேசியிருக்கிறார்.நன்றி: தொகுப்பாளர் அர்ச்சனா அவர்கள், வாவ் லைஃப் யூட்யூப் சேனல்