தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Entrepreneurship: ’க்ளப் ஹவுஸ் மூலம் இணைந்த குரல்கள்!’ வீட்டில் இருந்தே லட்சங்களில் வருமானம் ஈட்டும் சிங்க பெண்கள்!

Entrepreneurship: ’க்ளப் ஹவுஸ் மூலம் இணைந்த குரல்கள்!’ வீட்டில் இருந்தே லட்சங்களில் வருமானம் ஈட்டும் சிங்க பெண்கள்!

Aug 08, 2024, 12:30 PM IST

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் ‘க்ளப் ஹவுஸ்’ செயலி மூலம் வணிகம் மற்றும் தொழில் முனைவு சார்ந்த விஷயங்களை கலந்துரையாடும் அமைப்பாக தொடங்கிய இந்த பயணத்தில் தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து உள்ளனர்.

  • கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் ‘க்ளப் ஹவுஸ்’ செயலி மூலம் வணிகம் மற்றும் தொழில் முனைவு சார்ந்த விஷயங்களை கலந்துரையாடும் அமைப்பாக தொடங்கிய இந்த பயணத்தில் தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து உள்ளனர்.
திருமணம் மற்றும் குழந்தை பேறு காலத்திற்கு பிறகு வேலை சார்ந்து பயணிக்கும் தளங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவது கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படும் வேளையில் பெண்கள் பலர் சுய தொழில் முனைவோர்களாக மாறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
(1 / 10)

வங்கி மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து கடன் மற்றும் முதலீடுகளை பெறுதல், தொழில் வளர்ச்சி முக்கியமான தொழில்சார் நெட்வொர்க்குகள் மற்றும் வழிகாட்டலை பெறுவது,  வளர்ந்து டிஜிட்டல் மார்க்கெட்டிக் உள்ளிட்ட விற்பனை சார்ந்த திறன்களை கற்பது, அரசு சார்பில் கிடைக்கும் தொழில் சார்ந்த நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவதில் உள்ள இடைவெளி உள்ளிட்டவை புதிதாக தொழில் செய்ய வருபவர்கள் சந்திக்கும் பிரச்னைகளாக உள்ளன.
(2 / 10)

மேற்கண்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை கொடுத்து வெற்றிகரமான தொழில் முனைவோராக வளர்த்தெடுக்கும் பணிகளை லாபநோக்கம் இன்றி ’Women Empowerment & Entrepreneurship’ என்ற அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
(3 / 10)
மேற்கண்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை கொடுத்து வெற்றிகரமான தொழில் முனைவோராக வளர்த்தெடுக்கும் பணிகளை லாபநோக்கம் இன்றி ’Women Empowerment & Entrepreneurship’ என்ற அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் ‘க்ளப் ஹவுஸ்’ செயலி மூலம் வணிகம் மற்றும் தொழில் முனைவு சார்ந்த விஷயங்களை கலந்துரையாடும் அமைப்பாக தொடங்கிய இந்த பயணத்தில் தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து உள்ளனர்.
(4 / 10)

இது தொடர்பாக Women Empowerment & Entrepreneurship அமைப்பின் நிறுவனர் மீனா அனில் குமார் கூறுகையில், டிப்ளமோ படித்த நான், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் ஊழியராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளேன். இந்த சமூகத்தில் இருந்து எனக்கு கிடைத்ததை மீண்டும் சமூகத்திற்கே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இது போன்ற செயல்பாடுகளை தொடங்க காரணமாக இருந்தது என கூறினார்.
(5 / 10)

கொரோனா காலத்தில் யாரும் வேலைக்கே செல்ல முடியாத நிலை இருந்தது, வேலைகளை இழந்த பலருக்கும் சுய தொழில் செய்ய ஆசை இருந்தது. ஆனாலும் தொழில் செய்வதற்கான புரிதல் மற்றும் வழிகாட்டுதல்களை பெற அவர்களுக்கு சிக்கல்கள் இருந்தது. இதனை புரிந்து கொண்ட நாங்கள் ‘கிளப் ஹவுஸ்’ செயலி மூலம் வணிகம் மற்றும் தொழில் முனைவு சார்ந்த உரையாடல்களை பேசத் தொடங்கினோம்.
(6 / 10)

தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு எப்படி விற்பனை செய்ய வேண்டும். அதற்காக எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை உறுதி செய்ய பேக்கேஜிங் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து வல்லுநர்களின் விளக்கங்கள் உடன் கூடிய இணைய வழி வகுப்புகளை நடத்தினோம்.
(7 / 10)

டிஜிட்டல் மார்க்கெட்ங் பயிற்சி மூலம் வீட்டில் இருந்தே சுய தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து பெண்களுக்கு விளக்கினோம். தற்போது இந்த நெட் ஒர்க்கில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்து உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவார்.
(8 / 10)

தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்ய ஞாயிறு கிழமைகளை ‘டிஜிட்டல் சந்தை’ என்ற பெயரில் ‘க்ளப் ஹவுஸ்’ செயலி மூலம் விற்பனை வாய்ப்புகளை மகளிருக்கு ஏற்படுத்தி தருகின்றோம்.
(9 / 10)

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உட்பட 12 மண்டலங்களில் எங்கள் அமைப்பு இயங்கி வருகின்றது. இத பணிகளுக்காக எந்த கட்டணத்தையும் நாங்கள் பெறுவது கிடையாது. வணிகத்தை விரிவாக்கம் செய்ய நினைப்பவர்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் உதவுவது. அரசின் வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளையும் தொடர்ந்து செய்து வருவதாக மீனா அனில் குமார் கூறினார்.
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை