தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahul Gandhi: இரண்டு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் ஒரு வேட்பாளர் ஜெயித்தால் என்ன நடக்கும்?

Rahul Gandhi: இரண்டு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் ஒரு வேட்பாளர் ஜெயித்தால் என்ன நடக்கும்?

Jun 04, 2024, 05:58 PM IST

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை நெருங்கிவிட்டார். சட்டப்படி, 2 தொகுதிகளுக்கும் அவரால் மக்களவையில் பிரதிநிதித்துவம் செய்ய முடியுமா?

  • காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை நெருங்கிவிட்டார். சட்டப்படி, 2 தொகுதிகளுக்கும் அவரால் மக்களவையில் பிரதிநிதித்துவம் செய்ய முடியுமா?
ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ளார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார் (File Photo)
(1 / 6)
ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ளார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார் (File Photo)(HT_PRINT)
கூடுதலாக வயநாடு மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் இருந்தும் போட்டியிட்டுள்ளார். (ANI Photo)
(2 / 6)
கூடுதலாக வயநாடு மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் இருந்தும் போட்டியிட்டுள்ளார். (ANI Photo)(ANI)
இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏறக்குறையை அவர் வெற்றியை உறுதி செய்துள்ளார். (ANI Photo)
(3 / 6)
இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏறக்குறையை அவர் வெற்றியை உறுதி செய்துள்ளார். (ANI Photo)(ANI)
2 மக்களவைத் தொகுதிகளில் ஒரு வேட்பாளரால் போட்டியிட சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இரண்டு தொகுதிகளிலும் அந்த வேட்பாளர் ஜெயித்தால் அந்தத் தொகுதிகளை மக்களவை உறுப்பினராக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது (PTI Photo/Kamal Singh)
(4 / 6)
2 மக்களவைத் தொகுதிகளில் ஒரு வேட்பாளரால் போட்டியிட சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இரண்டு தொகுதிகளிலும் அந்த வேட்பாளர் ஜெயித்தால் அந்தத் தொகுதிகளை மக்களவை உறுப்பினராக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது (PTI Photo/Kamal Singh)(PTI)
அப்போது என்ன நடக்கும்? RPA, 1951 இன் பிரிவு 33(7)ன்படி, ஒருவர் இரண்டு தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டால், முடிவுகள் வந்த 14 நாட்களுக்குள் அவர் அவற்றில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் இரண்டு இடங்களும் காலியாகிவிடும். இதனால் காலியான தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும். 
(5 / 6)
அப்போது என்ன நடக்கும்? RPA, 1951 இன் பிரிவு 33(7)ன்படி, ஒருவர் இரண்டு தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டால், முடிவுகள் வந்த 14 நாட்களுக்குள் அவர் அவற்றில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையெனில் இரண்டு இடங்களும் காலியாகிவிடும். இதனால் காலியான தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும். (REUTERS/Sahiba Chawdhary/File Photo)
வரலாற்று ரீதியாக, முக்கிய அரசியல்வாதிகள் 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். 1996 பொதுத் தேர்தலின் போது, ​​முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காந்திநகர் மற்றும் லக்னோவில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். அவர் லக்னோவைத் தக்க வைத்துக் கொள்ளத் தேர்வு செய்தார். சோனியா காந்தி 2009 ஆம் ஆண்டு கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் உத்தரபிரதேசத்தின் அமேதியில் போட்டியிட்டார். 2019ல் குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இடங்களில் நரேந்திர மோடி போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று வாரணாசி தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். இவர்களைப் போல் ராகுல் இரண்டு தொகுதிகளிலும் வெல்லும் பட்சத்தில் அதில் ஒன்றை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.
(6 / 6)
வரலாற்று ரீதியாக, முக்கிய அரசியல்வாதிகள் 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். 1996 பொதுத் தேர்தலின் போது, ​​முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காந்திநகர் மற்றும் லக்னோவில் போட்டியிட்டு இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். அவர் லக்னோவைத் தக்க வைத்துக் கொள்ளத் தேர்வு செய்தார். சோனியா காந்தி 2009 ஆம் ஆண்டு கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் உத்தரபிரதேசத்தின் அமேதியில் போட்டியிட்டார். 2019ல் குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இடங்களில் நரேந்திர மோடி போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று வாரணாசி தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். இவர்களைப் போல் ராகுல் இரண்டு தொகுதிகளிலும் வெல்லும் பட்சத்தில் அதில் ஒன்றை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.(REUTERS)
:

    பகிர்வு கட்டுரை