(2 / 6)‘’இன்னும் தெளிவாகச் சொன்னால், 365 நாட்கள் எதை நாம் நினைத்துக்கொண்டு இருந்தோமோ, அதை நினைக்காமல், நாம் நினைக்காமல் தவறவிட்டவற்றை நினைப்பது. இன்னும் தெளிவாகச் சொன்னால், காசு, தொழில், குடும்பம் என்று எதையாவது நினைத்துக்கொண்டே இருப்போம்.கந்த சஷ்டி என்றால் என்ன?:முருகனை நினைக்கிறோமா என்றால் இல்லை. அதாவது 10-ல் ஒன்றாக வைத்து நினைத்துக்கொண்டு இருப்போம். அப்படி இல்லாமல், வேறு எதைப் பற்றியும் நினைக்காமல், முழு நாளுமே முருகனைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தால் சஷ்டி விரதம் என்று பொருள். அதற்கு உரிய முக்கியமான நாள் வேண்டும். அடுத்து உணவுக்கட்டுப்பாடு, உடம்பையும் மனதையும் கட்டுப்படுத்த நிச்சயம் வேண்டும். உணவைத் தவிர்த்துவிடுகிறேன் என்றால், எப்படி நமது உடலுக்கு ஏற்றவாறு உணவைத் தவிர்ப்பது''.