தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வசூலில் அள்ளிக்குவித்த படங்கள்! இந்த படமும் இருக்கா? பக்கா லிஸ்ட்!

தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வசூலில் அள்ளிக்குவித்த படங்கள்! இந்த படமும் இருக்கா? பக்கா லிஸ்ட்!

Nov 22, 2024, 07:42 PM IST

தமிழ் மொழித் திரைப்படங்கள் பல வேறு மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இந்த திரைப்படங்களில் சில அதன் ஒரிஜினல் படங்களை விட அதிகமான வசூலை பெற்று சாதனைப் படைத்துள்ளன. 

  • தமிழ் மொழித் திரைப்படங்கள் பல வேறு மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இந்த திரைப்படங்களில் சில அதன் ஒரிஜினல் படங்களை விட அதிகமான வசூலை பெற்று சாதனைப் படைத்துள்ளன. 
தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மற்ற மொழி ரசிகர்களை விட முற்றிலும் மாறுபட்டவர்களாகவே உள்ளனர். பெரிய ஹீரோக்களின் படமாக இருந்தாலும், நல்ல கதை இருந்தால் மட்டுமே படத்தை வெற்றி அடைய செய்யும் பழக்கம் தமிழ் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. இந்த வரிசையில் மற்ற மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் பெற்ற திரைப்படங்களை இங்கு காண்போம். 
(1 / 6)

2005 ஆம் ஆண்டு இயக்குனர் வயசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் சந்திரமுகி, இப்படம் ஒரு வருடத்திற்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது. இப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான மணிச்சித்ரதாழ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். மணிச்சித்ரதாழ் படம் சுமார் ரூ.3 கோடி மட்டுமே வசூலை பெற்றிருந்தது. ஆனால் தமிழில் வெளியான சந்திரமுகி ஓட்டுமொத்தமாக ரூ.90 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது. 
(2 / 6)

2004 ஆம் ஆண்டு தரணி இயக்கதில் விஜய் மற்றும் த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம் கில்லி, இப்படம் விஜயின் திரைப்பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் பூமிகா நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான ஒக்கடு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். ஒக்கடு படம் ரூ.23 கோடி வசூல் பெற்றிருந்த நிலையில்  கில்லி ரூ.50 கோடி வசூல் பெற்று சாதனை படைத்தது. 
(3 / 6)

2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன், கெளதமி மற்றும் நிவேதிதா தாமஸ் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் பாபநாசம், இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படமும் மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா ஆகியோர் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். த்ரிஷ்யம் வெளியாகி ரூ.75 கோடி வசூல் செய்த நிலையில் பாபாநாசம் ரூ.100 கோடி வசூல் செய்தது.  
(4 / 6)

பிரபுதேவா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் போக்கிரி. இதில் விஜய், த்ரிஷா மற்றும் நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர். இது தெலுங்கில் 2006 ஆம் ஆண்டு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான மகேஷ் பாபு நடித்த போக்கிரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். தெலுங்கு போக்கிரி ரூ.70 கோடி வசூல் பெற்றது. தமிழ் போக்கிரி ரூ. 75 கோடி வசூல் பெற்றது. 
(5 / 6)

இயக்குனர் சரண் இயக்கத்தில் கமல் ஹாசன், பிரபு, சினேகா, மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ், இப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. இது இந்தியில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் சஞ்சய் தத் நடித்து வெளியான முன்னா எம்பிபிஎஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை