தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ananthagiri Tour Package: வீக் எண்டில் வைப் செய்ய செம ஹிடன் ஸ்பாட்.. அனந்தகிரி ஒரு நாள் டூர் பேக்கேஜ் விவரம்!

Ananthagiri Tour Package: வீக் எண்டில் வைப் செய்ய செம ஹிடன் ஸ்பாட்.. அனந்தகிரி ஒரு நாள் டூர் பேக்கேஜ் விவரம்!

Jun 21, 2024, 09:39 PM IST

AnanthagiriTour Package: அரக்கு பள்ளத்தாக்கை போன்று இருக்கிறது, அனந்தகிரி மலை. இதனைப் பார்க்க தெலங்கானா சுற்றுலாத்துறை ஒரு பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த பேக்கேஜ் மூலம் ஹைதராபாத் நகரத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் முழு விவரங்களை இங்கே பாருங்கள்!

  • AnanthagiriTour Package: அரக்கு பள்ளத்தாக்கை போன்று இருக்கிறது, அனந்தகிரி மலை. இதனைப் பார்க்க தெலங்கானா சுற்றுலாத்துறை ஒரு பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த பேக்கேஜ் மூலம் ஹைதராபாத் நகரத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் முழு விவரங்களை இங்கே பாருங்கள்!
ஒரு பசுமையான டிரிப்பிற்கும் புதுவிதமான டிரிப்பிற்கும் ஏற்பாடு செய்ய நினைத்தால் மறக்காமல் நீங்கள், ஹைதராபாத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் இருக்கும் தெலங்கானா மாநிலத்தின் ’அரக்கு பள்ளத்தாக்கு’ என வர்ணிக்கப்படும் அனந்தகிரி மலைப்பயணத்துக்கு வீக் எண்ட் பயணத்தைத் திட்டமிடலாம். அங்கு இருக்கும் பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகளைப் பார்த்தால், நம் மனதை ஏதோ செய்துவிடும். 
(1 / 6)
ஒரு பசுமையான டிரிப்பிற்கும் புதுவிதமான டிரிப்பிற்கும் ஏற்பாடு செய்ய நினைத்தால் மறக்காமல் நீங்கள், ஹைதராபாத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் இருக்கும் தெலங்கானா மாநிலத்தின் ’அரக்கு பள்ளத்தாக்கு’ என வர்ணிக்கப்படும் அனந்தகிரி மலைப்பயணத்துக்கு வீக் எண்ட் பயணத்தைத் திட்டமிடலாம். அங்கு இருக்கும் பசுமையான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகளைப் பார்த்தால், நம் மனதை ஏதோ செய்துவிடும். (Image Source Twitter)
தெலங்கானா சுற்றுலாத்துறை இந்த அற்புதமான இடத்தைப் பார்வையிட ஒரு நாள் டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. முதல் நாள் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றுகொள்ளவும். அதன்பின், ஹைதராபாத்தில் இருந்து சாலை வழியாக அனந்தகிரி மலைக்கு அழைத்துச் செல்ல தெலங்கானா சுற்றுலாத் துறை வாகனங்களை இயக்குகிறது. 
(2 / 6)
தெலங்கானா சுற்றுலாத்துறை இந்த அற்புதமான இடத்தைப் பார்வையிட ஒரு நாள் டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது. முதல் நாள் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றுகொள்ளவும். அதன்பின், ஹைதராபாத்தில் இருந்து சாலை வழியாக அனந்தகிரி மலைக்கு அழைத்துச் செல்ல தெலங்கானா சுற்றுலாத் துறை வாகனங்களை இயக்குகிறது. (Image Source Twitter)
அனந்தகிரி பயணம் ஒரு நாளில் முடிவடைந்துவிடும். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தெலங்கானா சுற்றுலாத் துறையால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும். இது ‘ஹைதராபாத் டூ அனந்தகிரி ஒரு நாள் பேக்கேஜ் டூர்’ என்ற பெயரில் சுற்றுலாத்துறையினர் மூலம் இயக்கப்படுகிறது. 
(3 / 6)
அனந்தகிரி பயணம் ஒரு நாளில் முடிவடைந்துவிடும். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தெலங்கானா சுற்றுலாத் துறையால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியும். இது ‘ஹைதராபாத் டூ அனந்தகிரி ஒரு நாள் பேக்கேஜ் டூர்’ என்ற பெயரில் சுற்றுலாத்துறையினர் மூலம் இயக்கப்படுகிறது. (Image Source Twitter)
அட்டவணையின்படி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை காலை 09 மணிக்கு ஹைதராபாத் நகரின் துணைநகரான செகந்திராபாத்தில் உள்ள யாத்ரி நிவாஸில் இருந்து பஸ் புறப்படும். நண்பகல் 12 மணிக்கு அனந்தகிரி சென்றடையும். முதலில் சுற்றுலாப் பயணிகள் அனந்த பத்மநாபசுவாமியை அங்கு தரிசிக்கலாம். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை வனப்பகுதி சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுகிறது. மதியம் 01.30 மணி முதல் 02.30 மணி வரை, ஹரிதா ஹோட்டலில் மதிய உணவு தெலங்கானா சுற்றுலாத் துறையால் இயக்கப்படுகிறது. 
(4 / 6)
அட்டவணையின்படி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை காலை 09 மணிக்கு ஹைதராபாத் நகரின் துணைநகரான செகந்திராபாத்தில் உள்ள யாத்ரி நிவாஸில் இருந்து பஸ் புறப்படும். நண்பகல் 12 மணிக்கு அனந்தகிரி சென்றடையும். முதலில் சுற்றுலாப் பயணிகள் அனந்த பத்மநாபசுவாமியை அங்கு தரிசிக்கலாம். மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை வனப்பகுதி சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுகிறது. மதியம் 01.30 மணி முதல் 02.30 மணி வரை, ஹரிதா ஹோட்டலில் மதிய உணவு தெலங்கானா சுற்றுலாத் துறையால் இயக்கப்படுகிறது. (Image Source Twitter)
மதியம் 02.30 மணி முதல் 04.30 மணி வரை, வேடிக்கை மற்றும் விளையாட்டு செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை - தேநீர், சிற்றுண்டி வழங்கப்படுகிறது. பின், மாலை 05.00 மணிக்கு அனந்தகிரியில் இருந்து பேருந்து புறப்பட்டு 08.00 PMக்கு ஹைதராபாத்தை அடைந்து, இந்த பயணம் முடிவடைகிறது. 
(5 / 6)
மதியம் 02.30 மணி முதல் 04.30 மணி வரை, வேடிக்கை மற்றும் விளையாட்டு செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை - தேநீர், சிற்றுண்டி வழங்கப்படுகிறது. பின், மாலை 05.00 மணிக்கு அனந்தகிரியில் இருந்து பேருந்து புறப்பட்டு 08.00 PMக்கு ஹைதராபாத்தை அடைந்து, இந்த பயணம் முடிவடைகிறது. (Image Source Twitter)
தெலங்கானா சுற்றுலாத் துறைமூலம் ஹைதராபாத்தில் இருந்து இப்பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஹைதராபாத் முதல் அனந்தகிரி செல்ல பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.1800 ஆகும். சிறியவர்களுக்கு ரூ.1440 ஆகும். ஏசி இல்லாத பேருந்தில் தான் இந்த சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும். இந்த தொகுப்பை முன்பதிவு செய்ய 9848540371 என்ற தொலைபேசி எண் அல்லது https://tourism.telangana.gov.in/ வலைத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.
(6 / 6)
தெலங்கானா சுற்றுலாத் துறைமூலம் ஹைதராபாத்தில் இருந்து இப்பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஹைதராபாத் முதல் அனந்தகிரி செல்ல பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.1800 ஆகும். சிறியவர்களுக்கு ரூ.1440 ஆகும். ஏசி இல்லாத பேருந்தில் தான் இந்த சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும். இந்த தொகுப்பை முன்பதிவு செய்ய 9848540371 என்ற தொலைபேசி எண் அல்லது https://tourism.telangana.gov.in/ வலைத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.(Image Source Twitter)
:

    பகிர்வு கட்டுரை