தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அமரன் விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறன் அப்படி பேசியிருக்கக் கூடாது.. வலைப்பேச்சு அந்தணன் படாபட் பதில்

அமரன் விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறன் அப்படி பேசியிருக்கக் கூடாது.. வலைப்பேச்சு அந்தணன் படாபட் பதில்

Nov 06, 2024, 04:47 PM IST

அமரன் விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறன் அப்படி பேசியிருக்கக் கூடாது.. வலைப்பேச்சு அந்தணன் படாபட் பதில் கொடுத்துள்ளார். 

  • அமரன் விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறன் அப்படி பேசியிருக்கக் கூடாது.. வலைப்பேச்சு அந்தணன் படாபட் பதில் கொடுத்துள்ளார். 
அமரன் படத்தின் விமர்சனத்தின்போது ப்ளூ சட்டை மாறன் தரம்தாழ்ந்து விமர்சித்ததைத் தவிர்த்து இருக்கலாம் என வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு வலைப்பேச்சு அந்தணன் பேசியதாவது, ‘ ஒரு படத்தை விமர்சனம் செய்ய எல்லா உரிமையும் இருக்கிறது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் குறித்த தனிப்பட்ட தாக்குதலை செய்ய வேண்டும் என்றால், விமர்சனத்தோடு கலக்கக்கூடாது. அவரைப் பற்றி தனியாக ஒரு வீடியோ போட்டால்கூட, ஓரளவு ஒத்துக்கலாம்''.
(1 / 6)

‘’நீங்கள் கல்லெடுத்து அடிங்க. கன்னாபின்னானு திட்டுங்க எல்லாம் ஓ.கே. என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்க. ஒருவருடைய சாவு எனச் சொல்லும்போது கேட்கும்போதே கஷ்டமாக இருக்குது. சாவு என்பது கொடுமையானது என்பது எல்லோருக்குமே தெரியும்.அதன்பின் ஒரு குடும்பம் இருக்கு. கேட்கும்போதோ, பார்க்கும்போதோ எவ்வளவு வேதனையாக இருக்கும். அதை வந்து ப்ளூ சட்டை மாறன் அமரன் விமர்சனத்தில் தவிர்த்திருக்க வேண்டும். ப்ளூ சட்டை மாறன் நல்ல நண்பர் தான். நேரில் கூட சொல்லிடலாம். நீங்கள் கேட்டதால் அப்படி சொல்கிறேன்''.
(2 / 6)

‘’நடிகர்களை உருவக்கேலி செய்யக்கூடாது அப்படின்னு சொல்வதில் ஒரு சின்ன மாறுபாடு எனக்குண்டு. ஒரு ஹீரோ என்பவர், ஹீரோவுக்குண்டான எல்லா லட்சணங்களோடும் இருக்கணும். அதற்குத் தான் சம்பளம் கொடுக்கிறாங்க.நீங்களோ நானோ போனால் அத்தனை கோடி கொடுக்கப்போறாங்களா?. படத்தில் ஒரு ஹீரோ நடிக்கிறார். 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் அப்படின்னு நினைத்தால், நீங்கள் ஒல்லியாக இருப்பீங்கன்னு நம்பி தான் கொடுக்கிறாங்க''.
(3 / 6)

‘’ஒரு படத்தில் நடிக்கக் கமிட்டாகிட்டு, 20 கிலோ வெயிட் கூட்டீட்டிங்க அப்படியென்றால், ஆரம்பத்தில் ஒரு மாதிரி தோற்றம், நடுவில் ஒரு தோற்றம், கடைசியில் ஒரு தோற்றத்தில் ஹீரோ இருப்பார் என்றால், படம் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு எவ்வளவு வயிற்றெரிச்சலாக இருக்கும். அதனால் இப்படி பரோட்டா மாதிரி இருக்கேன்னு சிம்புவை ப்ளூ சட்டை மாறன் கேட்டதில் ஒரு நியாயம் இருக்கு.அதை தவறு என்று சொல்லமாட்டேன். அதை உருவக்கேலி லிஸ்டில் கொண்டு வரமாட்டேன். இதுவே, ஒரு நடிகர் இல்லாமல் வேறு ஒருவரைச் சொன்னால் அது நிச்சயமாக உருவக்கேலி தான்.உங்கள் உருவத்தைப் பார்த்து தான் பிஸினஸே நடக்குது எனும்போது, அதற்குண்டான தகுதியோடு நீங்கள் இருப்பதில் தவறில்லையே''.
(4 / 6)

‘’நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வரும்போது, இந்த மாதிரி விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை இல்லையென்றால் ஒன்றும் செய்யமுடியாது.நடிகர், நடிகைகளுக்கான சம்பளம் என்பது உங்கள் அழகுக்காக கிடைக்கும்போது, நீங்கள் அதைச் சரிவர செய்யவில்லையென்றால் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவீர்கள்.அமரன் முதல் நாள் வசூல் ரூ.20 கோடின்னு சொல்றாங்க. அமரன் படத்தின் மேக்கிங் எனக்குப் பிடிச்சிருந்தது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, படம் அப்படிங்கிற ஃபீல் இல்லாமல், சிவகார்த்திகேயன்கூடவே டிராவல் செய்யிற மாதிரி இருந்தது. அந்தப் படைப்பின் நேர்த்தி, அமரன் படத்தில் அமைச்சிருக்கு''.
(5 / 6)

‘’சிவகார்த்திகேயனின் மிகப்பெரும் வளர்ச்சி, பல நடிகர்களுக்கு வயிறு எரிய வைத்தது எல்லாம் உண்மை தான். நடுவில் அவர் விமர்சனத்துக்குரியவராக மாறினார். நான் கூட பேசினேன். அதெல்லாம் வேற. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி, மற்றவர்கள் பொறாமையால் புகை விடுவதின் உச்சமாக, அமரன் பார்க்கப்படுகிறது. நான் வேறு ஒரு ஆளுடா அப்படின்னு அதற்குண்டான டெடிகேசனோட வந்து நின்னார் இல்லையா, ஒரு படத்துக்காக வந்தவுடன் அதற்காக மொத்தமாக மாறி நின்னார் இல்லையா, அது பாராட்டத் தக்கது’’ என பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் பேசியுள்ளார்.நன்றி: ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனல்
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை