தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அஸ்வின் செய்த தெறிக்கவிடும் சம்பவங்கள்.. கிரிக்கெட் கேரியரில் மறக்க முடியாத டாப் இன்னிங்ஸ்

அஸ்வின் செய்த தெறிக்கவிடும் சம்பவங்கள்.. கிரிக்கெட் கேரியரில் மறக்க முடியாத டாப் இன்னிங்ஸ்

Dec 19, 2024, 08:00 AM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஸ்பின் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், இனி ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற கிளப் போட்டிகளில் மட்டும் விளையாடுவார்

  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஸ்பின் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின், இனி ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற கிளப் போட்டிகளில் மட்டும் விளையாடுவார்
சுழல் ஜாலம் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்திருக்கும் அஸ்வின், இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை மீட்டெடுத்த மீட்பாளராகவும் திகழ்ந்துள்ளார். அஸ்வின் என்ற பெயரை சொன்னவுடனேயே நினைவுக்கு வரும் அவரது டாப் பெர்பார்மென்ஸ்களை பார்க்கலாம்
(1 / 6)
சுழல் ஜாலம் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்திருக்கும் அஸ்வின், இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை மீட்டெடுத்த மீட்பாளராகவும் திகழ்ந்துள்ளார். அஸ்வின் என்ற பெயரை சொன்னவுடனேயே நினைவுக்கு வரும் அவரது டாப் பெர்பார்மென்ஸ்களை பார்க்கலாம்(AP)
2021 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டியை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. தொடர் 1-1 என சமநிலையில் இருந்தபோது, ஆஸ்திரேலியா பக்கம் வெற்றியின் காற்று வீச அதை தடுக்கும் விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் - ஹனுமா விகாரி ஆகியோர் நங்கூர இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியா பவுலர்களின் ஆக்ரோஷமான பந்து வீச்சில் 259 பந்துகளை எதிர்கொண்ட இந்த ஜோடி 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை டிரா செய்து, தொடரையும் கைவிட்டு நழுவாமல் பார்த்துகொண்டது  
(2 / 6)

ரவிச்சந்திரன் அஷ்வின் - ஹனுமன் விஹாரி ஜோடி 6வது விக்கெட்டுக்கு விளையாடி, ஆஸ்திரேலியாவின் அட்டாக்கிங் பவுலிங்கை பொறுமையாவும் நிதானமாகவும் கையாண்டது. அஸ்வினுக்கு இந்த போட்டியில் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்த போதிலும், அந்த வலியை பொருப்படுத்தாமல் பொருட்படுத்தாமல் ஆஸி., பவுலர்களின் தீவிமான பந்து வீச்சை தைரியமாக எதிர்கொண்டார். இதில் பல பந்துகள் அவரது உடலை பதம் பார்த்தன. பீல்டிங்கிலும் அட்டாக் செய்து பயமுறுத்தினார்கள். ஆனாலும் கடைசி வரை விடாப்பிடியாக களத்தில் நின்று தனது விக்கெட்டை காப்பாற்றிய அஸ்வின் 128 பந்துகளில் 3 ரன்கள் அடித்தார். இவருடன் பார்டனர்ஷிப் அமைத்த விகாரியும் 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் எடுத்தார்
(3 / 6)

தோனி தலைமையிலான இந்திய அணி 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. மழையால் 20 ஓவர் போட்டியாக நடந்த இந்த ஆட்டத்தில் பவுலிங், பீல்டிங்கில் ராஜ்ஜியம் நடத்தினார் அஸ்வின். இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக பேட் செய்து வந்த ரவி போபரா, இயான் மார்கன் ஆகியோரது கேட்ச்களை அடுத்தடுத்து பிடித்தார். அத்துடன் மிக முக்கியமாக ஆட்டத்தின் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக திகழ்ந்தார். 2011 உலகக் கோப்பை வெற்றிக்கு தோனியின் சிக்ஸர் என்றால், 2013 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அஸ்வின் வீசிய கடைசி டாட் பந்து இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும்
(4 / 6)

2022 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி ஒற்றை ஆளாக அணியின் வெற்றிக்கு போராடி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து சென்று வந்து விடுவார். அப்போது ஒரு பந்துக்கு 2 ரன்கள் என தேவைப்பட்ட போது நவாஸ் லெக் சைடு நோக்கி வீசிய பந்தை அநாவசியமாக தொடமல் லீவ் செய்வார் அஸ்வின். இதனால் வைடு மூலம் இந்தியாவுக்கு ஒரு ரன் கிடைத்து போட்டி டை ஆகிவிடும். பின்னர் கடைசி பந்தில் ரன் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். சமயோஜிதமாக அஸ்வின் பந்தை விட்டு வைடு வாங்கிய சம்பவம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தருணமாக இருந்தது
(5 / 6)

2014 நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஆக்லாந்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில், 315 ரன்களை சேஸ் செய்தபோது 184 ரன்களுக்கு 6 விக்கெட் என இந்தியா தடுமாறியது. அப்போது ஜடேஜாவுடன் - அஸ்வின் அதிரடியாக பேட் செய்து 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதுவரை இல்லாத அளவில் ருத்ரதாண்டவ இன்னிங்ஸ் விளையாடிய அஸ்வின் ஒரு நாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 46 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். இந்த போட்டி டையில் முடிவுற்றது என்றாலும் அஸ்வினின் பேட்டிங் மறக்க முடியாததாகவும், சிறந்த இன்னிங்ஸாகவும் மாற்றியுள்ளது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை