(8 / 8)மருத்துவரிடம் செல்வது - டீன் ஏஜ் வயதினர் 21 வயது வரை அவர்களின் மருத்துவரை அவ்வப்போது சென்று சந்திக்கவேண்டும்.அவர்களுக்கு இந்தப் பருவத்தில்முகப்பருக்கள்ஆஸ்துமாசுவாசக் கோளாறுகள்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், அவர்களுக்கு அது அவசியம் ஆகிறது. அவர்கள் உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளின் உடல் அளவை பரிசோதித்து அவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் மற்றும் செய்யவேண்டிய பயிற்சிகள் குறித்து விளக்குவார்கள்.பாலியல் ஆரோக்கியம் குறித்தும் அவர்கள் விளக்குவார்கள். நீங்கள் டீன் ஏஜ் பருவத்திலே செக்ஸில் ஈடுபடத்துவங்கிவிட்டீர்கள் என்றால், பாலியல் நோய்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.அவர்களை மருத்துவருடன் தனியாக உரையாட அறிவுறுத்தவேண்டும். அவர்களுக்கு பாலியல், பாலினம், பாலியல் நோய்கள், மது, போதைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் தேவையிருக்கும். இதை அவர்கள் தங்கள் பெற்றோர் முன் பேச தயங்குவார்கள். எனவே அவர்களுக்கு மருத்துவருடனான தனிமை அவசியம்.