(9 / 9)மனநலன் - உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் மன அல்லது உளவியல் பிரச்னைகள் உள்ளதா என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் அந்த பிரச்னைகள் இருந்தாலும் அவர்களின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்படும். எனவே மனஅழுத்தம், பயம் குறித்து அவர்களுடன் எப்போதும் திறந்த உரையாடலை நடத்துங்கள். தேவைப்பட்டால் கவுனிசிலிங் செல்லாம்.கூடுதல் படிப்புகள் - உங்கள் குழந்தைகள் படிப்பைதவிர எக்ஸ்ட் கரிக்குலர் எனப்படும் கூடுதல் விஷயங்களில் கவனம் செலுத்துவது அவர்களின் திறன்களை அதிகரிக்கும். அவர்களுகுகு அது குழுவாக இயங்குவது, நேர மேலாண்மை, ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கும். இசை, விளையாட்டு என அவர்களின் படிப்பு கூடவே சிலவற்றையும் சேர்த்து கற்கட்டும். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.திறந்த உரையாடல் - உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருங்கள். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி குறித்து அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் வளர்ச்சியில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைகள் பள்ளியில் சந்திக்கும் சவால்கள் குறித்தும் பேசுங்கள். அதையும் தவிர்க்க வீட்டில் வியூகம் அமைக்க அது உதவும்.