தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tn Weather Update: மக்களே உஷார் .. வெளுக்க ரெடியான மழை..6 மாவட்டங்களுக்கு வார்னிங் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

TN Weather Update: மக்களே உஷார் .. வெளுக்க ரெடியான மழை..6 மாவட்டங்களுக்கு வார்னிங் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Aug 08, 2024, 02:35 PM IST

TN Weather Update: மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்படி, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  • TN Weather Update: மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்படி, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(1 / 6)

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் (ஆக.8,9) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேத்தில் வீசக்கூடும்.
(2 / 6)

செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(3 / 6)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவுமேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(4 / 6)

ஆகஸ்ட் 9,10-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஆகஸ்ட் 11-ம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 6 மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 12-ம் தேதி விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(5 / 6)

மத்திய மேற்கு அதை ஒட்டிய மத்திய கிழக்கு -வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை