(1 / 6)MERCURY: வேத ஜோதிடத்தில், கிரகங்கள் பின்னோக்கி சென்று நேராக நகரும் நிகழ்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது 12 ராசிகளைக் கொண்டு இருக்கும் பொதுமக்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் மாதத்தில், கிரகங்களின் இளவரசனான புதன் பகவான் பிற்போக்காக நகர்கிறது. சில நாட்களில், புதன் கிரகம் அதன் இயக்கத்தை மாற்றப் போகிறது.கடந்த ஆகஸ்ட் 5 முதல், பிற்போக்காக நகரும் புதன் சுமார் 24 நாட்களுக்குப் பிறகு அதன் வேகத்தை மாற்றி, ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று அதிகாலை 02:43 மணிக்கு கடகத்தில் நேரடியாக மாறுகிறார்.ஜோதிட கணக்குப்படி, கடக ராசியில் புதன் கிரகத்தின் நேரடி இயக்கம் சில ராசிகளின் அதிர்ஷ்டத்தைப் பிரகாசமாக்கும். அதே நேரத்தில், சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.புதன் பகவானால் அதிர்ஷ்டத்தைச் சந்திக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.