தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Female Athletes Gender Debate: பதக்கம் பறிப்பு, தகுதி நீக்கம்..! பாலின சர்ச்சையில் சிக்கிய வீராங்கனைகளும், பின்னணியும்

Female Athletes Gender Debate: பதக்கம் பறிப்பு, தகுதி நீக்கம்..! பாலின சர்ச்சையில் சிக்கிய வீராங்கனைகளும், பின்னணியும்

Aug 03, 2024, 07:05 AM IST

பாரிஸ் ஒலிம்பிக்கில் அல்ஜீரியா குத்துசண்டை வீராங்கனை மீது பாலின சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இவரை போல் விளையாட்டு போட்டிகளில் இதே பிரச்னையை சந்தித்த வீராங்கனைகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் அல்ஜீரியா குத்துசண்டை வீராங்கனை மீது பாலின சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இவரை போல் விளையாட்டு போட்டிகளில் இதே பிரச்னையை சந்தித்த வீராங்கனைகள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.
மகளிருக்கான போட்டிகளில் பங்கேற்று, பதக்கமும் வென்று பாலின விவாத சர்ச்சை என்பதை பலரும் சந்தித்துள்ளனர். இந்திய வீராங்கனைகளான டூட்டி சந்த், சாந்தி செளந்தரராஜன் ஆகியோரும் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்துள்ளனர்
(1 / 10)

25 வயதாகும் இமானே கெலிஃப், பாரிஸ் ஒலிம்பிக்கில் முரட்டுத்தனமான பஞ்ச் மூலம் இத்தாலி வீராங்கனை  ஏஞ்சலா கரினியை வெளியேற்றினார். 46 விநாடிகள் மட்டும் நீடித்த இந்த போட்டியில் இமானே கெலிஃப் பெற்ற வெற்றி அவர் மீது பாலின சோதனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
(2 / 10)
25 வயதாகும் இமானே கெலிஃப், பாரிஸ் ஒலிம்பிக்கில் முரட்டுத்தனமான பஞ்ச் மூலம் இத்தாலி வீராங்கனை  ஏஞ்சலா கரினியை வெளியேற்றினார். 46 விநாடிகள் மட்டும் நீடித்த இந்த போட்டியில் இமானே கெலிஃப் பெற்ற வெற்றி அவர் மீது பாலின சோதனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது(AFP)
தென் ஆப்பரிக்கா ஓட்டப்பந்தய வீராங்கனையான கேஸ்டர் செமன்யா மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள், மூன்று உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளார்
(3 / 10)

2009 உலக சாம்பியன்ஷிப் வெற்றியைத் தொடர்ந்து, செமன்யாவுக்கு பாலின சரிபார்ப்பு சோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவரது பரிசோதனை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், ஜூலை 2010இல் செமன்யா மீண்டும் களமிறங்க அனுமதிக்கப்பட்டார்
(4 / 10)

முன்னாள் இந்திய ஸ்ப்ரிண்டர் டூட்டி சந்த் விளையாட்டு உலகை உலுக்கிய மற்றொரு ஹைபராண்ட்ரோஜெனிசம் சர்ச்சையில் சிக்கிய நபராக இருந்தார். இதன் விளைவாக 2014ஆம் ஆண்டில், அவர் இந்தியாவின் காமன்வெல்த் அணியிலிருந்தும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்தும் ஹைபராண்ட்ரோஜெனிசம் காரணமாக நீக்கப்பட்டார்
(5 / 10)

விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) தீர்ப்பை எதிர்த்து இவர் முறையிட்டதன் விளைவாக, இதன் விளைவாக தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கம் (IAAF) ஹைபராண்ட்ரோஜெனிசம் குறித்த தனது கொள்கையை மாற்றிய நிலையில், இந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களை பெண்களாக போட்டியிடவும் அனுமதித்தது
(6 / 10)

தமிழ்நாட்டை சேர்ந்த சாந்தி செளந்தரராஜன் பாலின சர்ச்சையில் சிக்கிய ஓட்டப்பந்தய வீராங்கனையாக திகழ்ந்தார். 2006ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற பிறகு, அவர் பாலின சரிபார்ப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்
(7 / 10)

பெண்ணின் பாலினப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை" என்று முடிவுகள் வெளியாகின. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், பதக்கமும் பறிக்கப்பட்டது
(8 / 10)

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நியூசிலாந்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்தார். அவரது உயிரியல் நிலை நன்மையைக் கொடுத்தது என்று பலர் வாதிட்ட போதிலும், ஹப்பார்ட் டோக்கியோவில் பதக்கம் வெல்ல தவறிவிட்டார்
(9 / 10)

அமெரிக்காவை சேர்ந்த 25 வயதாகும் லியா தாமஸ் என்ற திருங்கை நீச்சல் வீராங்கனையாக திகழ்ந்தார். சட்ட சவாலில் தோல்வியுற்று அமெரிக்க ஒலிம்பிக் அணியில் இடம்பெறாமல் போனார்
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை