தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2024 ஆம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி.. இன்று முதல் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்தான்.. உங்க ராசி என்ன?

2024 ஆம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி.. இன்று முதல் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்தான்.. உங்க ராசி என்ன?

Dec 15, 2024, 08:39 AM IST

கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். அந்த வகையில் சூரிய பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாற உள்ளார். இதனால் பல ராசிகளுக்கு சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். அந்த வகையில் சூரிய பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாற உள்ளார். இதனால் பல ராசிகளுக்கு சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் ராசியை அவ்வப்போது மாற்றுகிறது. கிரகங்களின் ராசி மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றம் சிலருக்கு நல்லதாக அமையும், சிலருக்கு இது அமங்கலமானதாக அமையலாம்.  
(1 / 6)

அந்தவகையில், சூரிய பகவான் (இன்று) டிசம்பர் 15 ஆம் தேதி ராசியை மாற்றப் போகிறார்.  இது 2024 ஆம் ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சியாகும். சூரிய பகவான் இன்று இரவு 10:56 மணிக்கு தனுசு ராசிக்கு மாற உள்ளார். சூரியன் மாற உள்ள நிலையில், இந்த பதிவில் வருடத்தின் கடைசி சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
(2 / 6)

சூரியனின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. வரப்போகும் புத்தாண்டில் பண வரவு அதிகரிக்கும். பதவி உயர்வுடன் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த நேரம் உங்களுக்கு சிறப்பானதாக அமையப்போகிறது. 
(3 / 6)

சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை, தனுசு ராசியில் சூரியனின் பயணம் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அமையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். தன்னம்பிக்கை மேம்படும். வரப்போகும் ஆண்டில், தடைபட்ட காரியங்கள் எல்லாம் கைகூடி வரும். 
(4 / 6)

சூரியனின் இந்த ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இலக்குகளை அடைவதற்கு இது சரியான நேரம். இந்த நேரத்தில் நீங்கள் பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சூரிய பகவானின் அருளால், உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த முடியும். வருமானமும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வரப்போகும் ஆண்டில் உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
(5 / 6)

சூரியனின் கடைசி பெயர்ச்சியால் தனுசு ராசியினருக்கு மங்களகரமானதாக அமையும். வரப்போகும் ஆண்டில், நீங்கள் எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு இது சாதகமான நேரம். சூர்யதேவ் அருளால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். (பொறுப்பு துறப்பு) இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை