தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ’செந்தில் பாலாஜி வழக்கில் திருப்பம்! ரெய்டில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் எங்கே!’ Ed-க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

’செந்தில் பாலாஜி வழக்கில் திருப்பம்! ரெய்டில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் எங்கே!’ ED-க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Jul 24, 2024, 09:04 PM IST

Senthil Balaji case: செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் கடந்த 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம் ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்க மாட்டேன் என்கிறீர்கள்.

  • Senthil Balaji case: செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் கடந்த 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம் ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்க மாட்டேன் என்கிறீர்கள்.
செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பெண்டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே?, நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விகளுக்கு கூட அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை என உச்சநீதிமன்றம் சாடி உள்ளது. 
(1 / 7)

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்ற நீதிபதி ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. 
(2 / 7)

செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில், அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேதா ஆஜராகி வாதாடினார். 
(3 / 7)

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் இருந்து பென் டிரைவ் போன்ற டிஜிட்டல் ஆவணங்களை கைப்பறியதாக கூறி இருந்தனர். இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து ‘அது எங்களுடையது கிடையாது. அதில் என்ன உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது’ என்று கூறி இருந்தனர். 
(4 / 7)

இந்த விசாரணையில் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பி உள்ளது.  பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை எங்கிருந்து எடுத்தீர்கள், அதில் இருந்த விஷயங்கள் அனைத்தும் செந்தில் பாலாஜி சார்ந்ததுதானா? என கேள்வி எழுப்பினர்.
(5 / 7)
இந்த விசாரணையில் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பி உள்ளது.  பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை எங்கிருந்து எடுத்தீர்கள், அதில் இருந்த விஷயங்கள் அனைத்தும் செந்தில் பாலாஜி சார்ந்ததுதானா? என கேள்வி எழுப்பினர்.(HT_PRINT)
பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது, அதில் தான் சார்ந்த ஆவணங்கள் எதுவும் இல்லை. நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள்.
(6 / 7)

தற்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால் அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறீர்கள் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் கடந்த 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம் ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்க மாட்டேன் என்கிறீர்கள். செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணக்களை பற்றி கேட்கிறோம். நீங்கள் அதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. உங்களிடம் இன்றைய தினம் இது சம்பந்தமாக பதில் இல்லை என்றால் நாளை வாருங்கள், பதிலோடு வாருங்கள் விசாரிப்போம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை