(5 / 6)தனித்துவமான குரல் அமைப்பைக் கொண்ட உதித் நாராயணுக்குத் தமிழில் இருக்கின்ற ரசிகர்கள் குறித்து சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார். காதலன் படத்தில் காதலிக்கும் பெண்ணின் கைகள் பாடல், முத்து படத்தில் குலுவாலிலே பாடல், மிஸ்டர் ரோமியோ படத்தில் ரோமியோ ஆட்டம் போட்டால் பாடல், கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்குப் பாடல், கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் ஈஸ்வரா பாடல், ரிதம் படத்தில் அய்யோ பத்திக்கிச்சு பாடல், உள்ளம் கொள்ளை போகுதே படத்தில் புயலே புயலே பாடல், திருடா திருடி படத்தில் ‘வண்டார் குழலி’ பாடல் எனப் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். காதல் பாடல்களைப் பாடுவதற்கு இவருக்கு நிகர் இவர் மட்டுமே. அந்த அளவிற்குக் காற்றிலேயே வார்த்தைகளைக் காதில் கொண்டு சேர்ப்பார். தமிழ் திரைப்படத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற முக்கிய இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் இவர் ஒரு முக்கிய பாடகர் ஆவார்.