தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Southern Railway: சென்னை - குருவாயூர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. மேலும் சில ரயில்கள் ரத்து - முழு விபரம்!

Southern Railway: சென்னை - குருவாயூர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. மேலும் சில ரயில்கள் ரத்து - முழு விபரம்!

Aug 03, 2024, 03:14 PM IST

பராமரிப்பு பணி காரணமாக மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

  • பராமரிப்பு பணி காரணமாக மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணி காரணமாக மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரம் இதோ..!
(1 / 10)

மதுரை – இராமநாதபுரம் இடையே பகல் 12.30 மணிக்கும் மற்றும் இராமநாதபுரம் – மதுரை இடையே காலை 11 மணிக்கும் இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலானது வருகிற ஆகஸ்ட் 5,6,8,9,11 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
(2 / 10)

மங்களூரு – கன்னியாகுமரி இடையே அதிகாலை 5.05 மணிக்கு இயக்கப்படும் பரசுராம் விரைவு ரயில் ஆகஸ்ட் 5,8 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். கன்னியாகுமரி – மங்களூரு சென்ட்ரல் இடையே அதிகாலை 3.45 மணிக்கு இயக்கப்படும் பரசுராம் விரைவு ரயில் வருகிற ஆகஸ்ட் 6,9 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருவனந்தபுரத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
(3 / 10)

மயிலாடுதுறை – செங்கோட்டை இடையே மதியம் 12 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ரயிலானது வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று திண்டுக்கல், சோழவந்தான், மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக புதுக்கோட்டை , காரைக்குடி, மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும்.
(4 / 10)

மதுரை – புனலூர் இடையே இரவு 11.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 5,8 ஆகிய நாட்களில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். மறுவழித்தடத்தில் புனலூர் – மதுரை இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது  ஆகஸ்ட் 6,9 ஆகிய நாட்களில் புனலூரில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்.
(5 / 10)

குருவாயூர் – சென்னை எழும்பூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 4,5,8,10 ஆகிய நாட்களில் மதுரை, சோழவந்தான், திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும்.
(6 / 10)

சென்னை எழும்பூர் – குருவாயூர் இடையே காலை 9.45 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று திண்டுக்கல், சோழவந்தான், மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக குருவாயூர் சென்றடையும்.
(7 / 10)

குருவாயூர் – சென்னை எழும்பூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 16 முதல் 26 ஆம் தேதி வரை கேரளா மாநிலம் எர்ணாகுளம் வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக செல்லும்.
(8 / 10)

சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் இடையே மாலை 3.10 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது, வருகிற ஆகஸ்ட் 18,25 ஆகிய தேதிகளில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக செல்லும்.
(9 / 10)

மேலும், திருச்சி-காரைக்குடி, மயிலாடுதுறை -செங்கோட்டை, கொச்சுவேலி-மங்களூரு, சென்னை - திருவனந்தபுரம் ஆகிய ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை