(2 / 6)இதுகுறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியில், ‘’ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல்போய் மீண்டு வந்தபின், அவர் சொல்ற அட்வைஸ் என்னவென்றால், தயவு செய்து தண்ணி அடிக்காதீங்க, தம் அடிக்காதீங்க அப்படின்னு தான். இவர் எல்லாம் எல்லாத்தையும் அனுபவிச்சாட்டார்னு சொல்வாங்க. அவர் அனுபவிச்சதால் வந்த வினைதான் அது. இந்த மாதிரி நிலைமையில் இருந்த ஒருத்தர் எல்லாம், அறுபது வயசுக்குமேல் தாண்டவில்லை. அதை நான் கண் எதிரில் பார்த்து இருக்கிறேன். அதனால் வேண்டாங்கன்னு ரஜினி சார் சொல்றது, அவர் பட்ட வேதனையைத்தான் சொல்றார்.சாமர்த்தியம் வேணும் ரஜினி நடந்ததுக்குக் காரணம், கன்னடம் மட்டுமே தெரிந்த ஒரு மனுஷன், தமிழ் சினிமாவில் நடிக்க வந்ததும் அவருக்கு என்ன மாதிரியான பாலிடிக்ஸ் எல்லாம் நடந்திருக்கும். எப்படியெல்லாம் குத்தி இருப்பாங்க. அதை யோசிச்சுப் பாருங்க. இன்றும் ரஜினி ஒரு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறதுக்குக் காரணம். அன்று அவரை முதுகில் குத்திய வலி தான்'' என்றார்.