(6 / 6)காரணம், இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை பொது வெளியில் கொண்டு வரும்பொழுது, உங்களை யாரும் வேலைக்கு கூப்பிட மாட்டார்கள். அதனால் குறை சொன்னவர்கள் வேலையில்லாமல் அவர்கள் மீண்டும் வறுமைக்குள் செல்ல வேண்டிய நிலைமை வரும். அவர்கள் வீடு கட்டி இருந்தால், அந்த வீடு அப்படியே பாதியில் நிற்கும். எங்காவது நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் மட்டும் பணம் கிடைக்கும். ஆகையால் உங்களுக்கு திரைத்துறைக்குள் தவறாக ஒன்று நடக்கிறது என்றால், அந்த பிரச்சினையை அங்கேயே முடிக்க முயற்சி செய்யுங்கள். அதை வெளியே சொல்லக்கூடாது. அது நமக்கே நாமே சாக்கடையை எடுத்து, நம் மீது போட்டுக் கொள்வது போன்று மாறிவிடும். சிலர் அந்த இயக்குநர் என்னை அப்படி செய்து விட்டார். படப்பிடிப்பில் காரி துப்பிவிட்டார். அடித்துவிட்டார் என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறார்கள். அதை பார்க்கும் இன்னொரு நடிகை என்ன நினைப்பார், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நமக்கு தேவையில்லை என்றுதானே நினைப்பார் ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியாது. இப்போது உள்ள காலமும் அப்படி மாறிவிட்டது. டெக்னாலஜியை பயன்படுத்தி தவறான விஷயத்தை கூட மிகத் தெளிவாக சரியான விஷயம் போன்று நம்மிடம் காண்பித்து விடுகிறார்கள்ஆகையால் ஒரு விஷயத்தை உண்மையா? பொய்யா என்று தெரியாமல் நாம் பேசவே கூடாது” என்று பேசினார்.