தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Alya Manasa: ‘பாடாய் படுத்திய கேன்சர்; காசுக்காக குரூப் டான்சர் வேலை; கருணை காட்டாத சினிமா - ஆல்யா பட்ட வேதனைகள்!

Alya Manasa: ‘பாடாய் படுத்திய கேன்சர்; காசுக்காக குரூப் டான்சர் வேலை; கருணை காட்டாத சினிமா - ஆல்யா பட்ட வேதனைகள்!

May 27, 2024, 07:24 AM IST

Alya Manasa: முடியை சரி செய்து கொள்வேன். ஆடிஷனுக்கு செல்வேன். பல நேரங்களில் அங்கு சென்ற பின்னர், அவர்கள் சொல்லக்கூடிய கேரக்டர் எனக்கு செட் ஆகாதது போல இருக்கும். அப்போது நான் அதை வேண்டாம் என்று மறுத்து வந்து விடுவேன். - ஆல்யா மானசா 

Serial Actress Alya Manasa latest interview about her cinema struggles father cancer treatment serial life and more
(1 / 7)

பிரபல நடிகையான ஆல்யா மானசா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு முன்னதாக அவர் கொடுத்த பேட்டியை இங்கு நினைவு கூறலாம்.  இது குறித்து அவர் பேசும் போது, “நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த இரண்டாம் ஆண்டிலேயே, படிப்பை அப்படியே நிறுத்திவிட்டு, சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியை செய்ய ஆரம்பித்து விட்டேன். அந்த சமயத்தில் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன். தினமும் காலையில் எழுந்திருப்பேன்; மேக்கப் செய்வேன்.  
(2 / 7)

முடியை சரி செய்து கொள்வேன். ஆடிஷனுக்கு செல்வேன். பல நேரங்களில் அங்கு சென்ற பின்னர், அவர்கள் சொல்லக்கூடிய கேரக்டர் எனக்கு செட் ஆகாதது போல இருக்கும். அப்போது நான் அதை வேண்டாம் என்று மறுத்து வந்து விடுவேன். சில சமயங்களில் அவர்கள், அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமானவள் இல்லை என்று சொல்லி, அனுப்பி விடுவார்கள். இது கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து கொண்டிருந்தது.   
(3 / 7)

ஆனால் நான் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அந்த சமயத்தில் எனக்கு பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி வந்தது. இதனையடுத்து, ஜிம் ட்ரெய்னராக வேலை பார்ப்பது, குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது, பாடலில் பின்னணியில் நடனம் ஆடுவது  உள்ளிட்ட  பல வேலைகளை செய்தேன். அதிலிருந்து எனக்கு ஒரு கணிசமான தொகை செலவுக்கு கிடைத்தது. ஆனால் நீண்ட காலம் என்னால் அப்படியே சென்று கொண்டிருக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் எனக்கு சீரியலில் இருந்து வாய்ப்பு வந்தது.   
(4 / 7)

ஆனால் அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. அது, சினிமாவுக்கு முயற்சி செய்து கொண்டிருந்த ஒரு பெண், சீரியலுக்கு வந்தால், அவளை மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்பது!அந்த சமயத்தில், என்னுடைய அப்பா வேறு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆகையால், என்னுடைய அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நான் அந்த சீரியல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன்.  
(5 / 7)

ஆனால், இப்போது நான் ஒரு விஷயத்தை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறேன். அது என்னவென்றால், 
(6 / 7)

நான் சினிமாவில் நடித்திருந்தால் என்னை மக்கள், தீபாவளி, பொங்கல் அல்லது ஏதாவது ஒரு நாளில் தான் பார்க்க முடியும். ஆனால் இப்போது சீரியலில் தினம் தினம் என்னை பார்க்கிறார்கள்” என்று பேசினார். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை