(6 / 6)‘’அதிமுக 20 விழுக்காடு வாக்கு வங்கியுடன் இருக்கிறது. பாஜக தன்னிச்சையாக 11.37 விழுக்காடு வாக்கு வங்கியுடனும், கூட்டணியுடன் 18 விழுக்காடு வாக்கு வங்கியினையும் வைத்திருக்கிறது.இது 25 விழுக்காடு ஆகும். மேலும் 30 விழுக்காடு ஆகும். தேசிய நீரோட்டத்தில் தேசியத்தை வளர்க்க வேண்டும் என கடுமையாக உழைப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்தேன் - சரத்குமார்1996ஆம் ஆண்டு, அன்று இருந்த அதிமுகவின் ஆட்சியை எதிர்த்து நான் அரசியலுக்கு வந்தேன். யாருக்கும் அன்று தைரியமும் கிடையாது. திராணியும் கிடையாது. அப்போது நான் விஜய் சொல்ற மாதிரி உச்ச நடிகர் தான். அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்குப் போய் பார்த்தது என்றால், அது சரத் குமாரின் படத்தைத் தான். அந்த சமயத்தில் தான், நான் அரசியலுக்கே வருகிறேன். பெரிய பெரிய வெற்றிகள் கொடுக்கும்போதுதான், நானும் அரசியலுக்கு வருகிறேன். காரணம், மக்கள் சேவைக்காக.அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்யமுடியாது என பலர் வீட்டில் வந்து பேசினார்கள். கல்லால் அடித்தார்கள். ஆனால், 40 நாட்கள் தொடர்ந்து, தேர்தல் பரப்புரை செய்தேன். நாங்கள் அரசியல் இயக்கம் ஆரம்பித்தபோது, மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன். என்னைப் பொறுத்தவரை உழைத்தால் எல்லாம் சாத்தியம்’’ என நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.