தை மாதத்தில் சனியினால் உண்டாகும் யோகத்தால் சில ராசிகள் நன்மைபெறுகின்றன.
தை மாதத்தில் சனியினால் உண்டாகும் யோகத்தால் சில ராசிகள் நன்மைபெறுகின்றன.
(1 / 6)
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்வார். வரும் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சனிபகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(2 / 6)
மேஷம்: வாழ்வில் வருவாய் அதிகரிக்கும். சனியினால் கிராமத்தில் வசிக்கும் மேஷ ராசியினருக்கு நல்ல பலன் வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மேம்படும். நம்பிக்கையான புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வாழ்வு புதிய உயரங்களைத் தொடும்.
(3 / 6)
சிம்மம்: இந்த ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிசெய்பவர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். நல்ல பெயருடன் சமூகத்தில் வாழ்வார்கள். நிலுவையில் இருக்கும் பணிகள் முடிவடையும்.
(4 / 6)
துலாம்: இந்த ராசியினர், புதிய சொத்துகளை வாங்கவும்,பழைய சொத்துகளை விற்கவும் இக்காலத்தில் வாய்ப்பு வந்துள்ளது. வாழ்வில் அடுத்தகட்டத்தில் பயணிப்பீர்கள். இம்முறை தொழிலில் லாபம் கூடும். திருமணத்தடை இருந்தால் அது நீங்கும்.
(5 / 6)
தனுசு: இந்த ராசியினருக்கு, இல்லறத்துணையுடன் இருந்த புரிதல் மேம்படும். புதிய செல்போன், வாகனம் வாங்கும் சூழல் உண்டாகும். பெரிய கனவுகளுக்கான முயற்சியைப் போட ஆரம்பிக்கலாம்.
(6 / 6)
மீனம்: இந்த ராசியினருக்கு வாழ்வு, கடந்த காலத்தை விட மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். சனிபகவானின் அருளாசியால் வாழ்க்கையின் தரம் மேம்படும். வெகுநாட்களாக நீங்கள் இழந்த சிரிப்பினைப் பெறுவீர்கள். வாழ்வில் நிம்மதியைப் பெறப்போகிறீர்கள்.