(6 / 6)‘’ஒவ்வொரு ஆத்மாவும் தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துட்டு, தன்னுடைய கடமைகளை எல்லாம் முடிச்சிட்டு மேலே போகணும். இதுதான் இந்த உலகத்தின் நியதி. அதற்காகத்தான் இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கு. அதை நோக்கி பயணப்படனும். யாரும் யாரையும் தட்டிவைக்கக் கூடாது. அது தான் நரை காலத்தில் பெருகும் விவாகரத்துகள். ஒரு அம்மா சொல்றாங்க, 55 வயசில் விவாகரத்து வாங்கப்போறேன்னு. என் புருஷனுக்கு சூடாக சமைத்துக் கொடுக்கணும். சுடச்சுட காபி போட்டுக்கொடுக்கணும். மதியம் சாப்பாடு, ஈவினிங் ஸ்நாக்ஸ், இரவு சமைக்கணும். இப்படி 35 வருஷமாக நான் இதே வேலையை தான் நான் செய்திட்டு இருக்கேன். என்னை விட்டுவிடுங்கள். எனக்குன்னு சின்ன சின்ன ஆசைகள் இருக்கு. அதை செய்துட்டு நான் செத்துடுறேன்னு சொல்றாங்க. இதில் யார் சரி, யார் தவறு. இது தான். 35 வருஷமாக அந்த பெண்ணை ஒரே வேலையை செய்யச் சொல்றோமேன்னு அந்த ஆத்மாவும் நினைக்கல. அது தான் அந்த பந்தம் உடைந்தது. எளிமையாக சொன்னால், ஒருத்தரை ஒருத்தர் நம்பணும் அவ்வளவு தான்’’ என நடிகர் சமுத்திரக்கனி தனது உரையை முடித்தார்.