(1 / 6)முன்னாள் கணவர் நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணத்தால், நடிகை சமந்தா கடும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக கிங் 24*7 யூட்யூப் சேனல் அளித்த தகவலின்படி, ‘’தமிழ்த்திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர், சமந்தா. முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்திருக்கும் நடிகை சமந்தா, தற்போது பல இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதேபோல், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவை, 2017ஆம் ஆண்டு காதலித்து கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார், நடிகை சமந்தா.அந்த திருமண விழாவுக்குப் பின் நாம் பார்க்கும்போது, சிறந்த ஜோடி எனப் பலரால் பேசப்பட்ட நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடி, சில வருடங்களுக்குள் பிரிந்தது.