தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நாயக்கரின் விசுவாசி.. படிப்பில் சுட்டி.. வகிடு எடுத்த ஐய்யர்.. - நாயகன் ஐய்யர் உருவான கதை தெரியுமா?

நாயக்கரின் விசுவாசி.. படிப்பில் சுட்டி.. வகிடு எடுத்த ஐய்யர்.. - நாயகன் ஐய்யர் உருவான கதை தெரியுமா?

Nov 10, 2024, 09:51 AM IST

சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய மிகப்பெரிய ப்ளஸ், உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்பதுதான். வேலு நாயக்கர் ஒரு இடத்தில் படிப்பில்லாமல் தடுமாறும் பொழுது நீங்கள் அவருக்கு உதவுவீர்கள் - டெல்லி கணேஷ்!

(1 / 7)

தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது 80 வயதாகும் அவர், மருத்துவரின் ஆலோசனைப்படி, மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், அவர் நேற்று இரவு 1 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
(2 / 7)
தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது 80 வயதாகும் அவர், மருத்துவரின் ஆலோசனைப்படி, மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், அவர் நேற்று இரவு 1 மணிக்கு உயிரிழந்துள்ளார்.( Samlike67)
அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவரது சினிமா கெரியரில், அவர் நடித்த கதாபாத்திரங்களுள், மிக முக்கியமான கதாபாத்திரமாக பார்க்கப்படும் ‘நாயகன்’ ஐய்யர் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து அவரே குமுதம் யூடியூப் சேனலுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். 
(3 / 7)

அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, “நாயகன் படத்தில் கமிட் ஆகும்பொழுது, அந்த படத்தில் நான் ஏதோ ஒரு ஐய்யர் கேரக்டரின் நடிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னார்கள். மற்றபடி எனக்கு அந்தப்படத்தின் கதையெல்லாம் சொல்லப்படவில்லை. நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றேன்; டயலாக் கொடுத்தார்கள்; ஏதோ நடித்தேன்; அவர்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
(4 / 7)

நாயக்கருக்கு பிடித்த ஐய்யர்இதனையடுத்து, அடுத்த நாள் மணிரத்னம் என்னை கூப்பிட்டார். நான் சென்றேன்; அப்போது அவர் உங்களிடம் யாராவது கதை சொன்னார்களா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். உடனே அவர், உங்களுடைய நடிப்பிலேயே அது தெரிந்தது; நீங்கள் என்னென்னமோ செய்து கொண்டிருந்தீர்கள். அப்படியெல்லாம் நடிக்க கூடாது என்று கூறினார். அத்துடன் அந்த கதாபாத்திரம் குறித்த விளக்கத்தை அளித்தார். அந்த விளக்கம் என்னவென்றால், நீங்கள் ஒரு பக்கா பிராமின். சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய மிகப்பெரிய ப்ளஸ், உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்பதுதான். வேலு நாயக்கர் ஒரு இடத்தில் படிப்பில்லாமல் தடுமாறும் பொழுது நீங்கள் அவருக்கு உதவுவீர்கள். அதுவுமில்லாமல், நீங்கள் மிகவும் அடக்கம் ஆனவர்; உங்களுடைய அந்த அடக்கம், ஹிந்தி, அறிவு ஆகிய மூன்றுமே வேலு நாயக்கருக்கு மிகவும் பிடித்து போய்விடும்; அதனால் அவர் உங்களை தன்னுடனே வைத்துக் கொள்வார்.
(5 / 7)

ஆரம்பத்தில் வேலு நாயக்கரின் வாழ்க்கையில் சிறிய பங்காக இருந்த நீங்கள், நாளடைவில் அவருடன் மிகவும் நெருக்கமாகி விடுவீர்கள்; நீங்கள் என்ன சொன்னாலும் வேலு நாயக்கர் செய்வார். 
(6 / 7)

அதற்காக நீங்கள் அவரிடம் எல்லாவற்றையும் கூற மாட்டீர்கள். இதுதான் உங்களுடைய கதாபாத்திரத்தின் வடிவம். இதை புரிந்து கொண்டு நடியுங்கள் என்றார். அதன் பின்னர் தான் அந்த கதாபாத்திரத்தின் தன்மை எனக்கு புரிந்தது. அந்தப்படத்தில் எல்லாமே நேச்சுரலாக இருக்க வேண்டும் என்று மணிரத்னம் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். அப்படி செய்தது தான் அந்த ஐய்யர் கேரக்டர்.உண்மையில் அந்த படம் என்னுடைய சினிமா கெரியரில் எனக்கு கிடைச்ச ஆஸ்கார் விருது” என்று கூறினார். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை