தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தமிழ் சினிமாவின் உண்மையான சகோதர சகோதரிகள்! சாதித்து காட்டியது யார்? சுவாரசிய தகவல்!

தமிழ் சினிமாவின் உண்மையான சகோதர சகோதரிகள்! சாதித்து காட்டியது யார்? சுவாரசிய தகவல்!

Nov 29, 2024, 01:17 PM IST

சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அண்ணன் தம்பியாகவும், அக்கா தங்கையாகவும் பல நடிகை, நடிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மட்டுமே சினிமாவில் காலூன்றி சாதித்து காட்டியுள்ளனர். அதன் மொத்த தொகுப்பை இங்கு காண்போம்.

  • சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அண்ணன் தம்பியாகவும், அக்கா தங்கையாகவும் பல நடிகை, நடிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மட்டுமே சினிமாவில் காலூன்றி சாதித்து காட்டியுள்ளனர். அதன் மொத்த தொகுப்பை இங்கு காண்போம்.
சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அண்ணன் தம்பியாகவும், அக்கா தங்கையாகவும் பல நடிகை, நடிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மட்டுமே சினிமாவில் காலூன்றி சாதித்து காட்டியுள்ளனர். அதன் மொத்த தொகுப்பை இங்கு காண்போம். 
(1 / 7)

பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் ஹிட் பிலிம்ஸ் இன் நிறுவனரான ஆர் பி சவுத்ரி அவர்களது இரண்டு மகன்களும் சினிமாவில் கதாநாயகர்களாக நடித்து வந்துள்ளனர். அவரது மூத்த மகனான ஜீவா பல படங்களில் நடித்து தற்போது வெளியான பிளாக் படம் வரை தன்னை முன்னணி கதாநாயகனாக நிலை நிறுத்தி வருகிறார். ஆனால் இவருடைய சகோதரர் ரமேஷ் ஜித்தன் எனும் படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு ரசிகர்களின் வரவேற்பு எதிர்பார்த்து அளவில் கிடைக்கவில்லை. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி இருந்தார். தற்போது வரை சினிமாவில் பெரிதாக சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(2 / 7)

தமிழில் ”அறிந்தும் அறியாமலும்” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்யா, அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்றளவும் ஒரு வெற்றி கதாநாயகர்களின்  வரிசையை தக்க வைத்து உள்ளார். இந்நிலையில் இவரது சகோதரரான சத்யா புத்தகம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து அமரகாவியம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் இவரும் தமிழ் சினிமாவில் அவ்வளவாக ஜொலிக்கவில்லை.
(3 / 7)

நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் அவர்களுக்கு  சிலம்பரசன் மற்றும் குறளரசன்  என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் நடிகர் சிலம்பரசன் மட்டுமே சினிமாவில் எதிர்பார்த்த அளவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரது சகோதரர் குறளரசன் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இருப்பினும் சினிமாவில் சிலம்பரசன் அளவிற்கு அவர் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(4 / 7)

தமிழ் சினிமாவில் வெளியான ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிம்ரன், 90களில் தொடங்கி தற்போது வரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றளவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது தங்கை மோனலும் ஒரு நடிகை ஆவார். இவர் விஜய் நடித்த பத்ரி உள்ளிட்ட  சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவர் சிம்ரன் அளவிற்கு படங்களில் நடித்து ரசிகர்களை கவரவில்லை. இந்த நிலையில் திடீரென தற்கொலை தற்கொலை செய்து கொண்டார். 
(5 / 7)

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான நடிகை ஷாலினி மற்றும் ஷாமிலி இருவரும் சகோதரிகளாவர். நடிகை ஷாலினி வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் முடித்துள்ளார். அவரது தங்கையான நடிகை ஷாமிலி தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவர் ஷாலினி அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை என்பது உண்மையே.
(6 / 7)

தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகன்கள் விஷால் மற்றும் விக்ரம் இருவரும் சகோதரர்கள் ஆவர். நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா பல ஆண்டுகளுக்கு முன்பு பூப் பறிக்க வருகிறோம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தார் . விஷால் அளவிற்கு அவர் தமிழ் சினிமாவில் அதிக படங்களின் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை