(6 / 6)அவர் வீட்டிற்கு வந்து படத்தில், ஒரு பெண்ணை காதலித்து, நீங்கள் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்கிறீர்கள் என்று சொன்னார். இதையடுத்து நான் மிகவும் கோபம் அடைந்து, வாழ்க்கையிலேயே ஒரு பெண்ணை காதலித்து அவளையே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து இருப்பவன் நான்.படத்தில் மட்டும் எப்படி அப்படி நடிக்க முடியும் என்று சொல்லி,ஒரு கதாநாயகியை தூக்குங்கள் என்று சொல்லிவிட்டேன்.இதையடுத்து ஒரு கதாநாயகியை தூக்கிவிட்டு, அந்தக் கதையை மாற்றினார்கள். அந்த படமும் நன்றாக சென்றது. இதையடுத்து மீண்டும் ‘பெத்தவ மனசு’ படத்தில் நாங்கள் இருவரும் இணைந்தோம். அந்த படத்தில் எனது பெயரை டைரக்டராக போட்டுக்கொள்ள ராஜ்கிரண் கேட்டார். முதலில் தயங்கிய நான் பின்னர் ஓகே என்றேன். அதில் துணை இயக்குனராக கே எஸ் ரவிக்குமார் வேலை பார்த்தார். ராஜ்கிரண் செய்த துரோகம்இதற்கிடையே அவருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்து அவர் சென்று விட்ட நிலையில், சில பிரச்சினைகள் காரணமாக படம் நின்றது. அடுத்து சில படங்கள் ட்ராப் ஆனது. இதையடுத்து படத்திற்கு கஸ்தூரி ராஜா டைரக்டர் என்று சொல்லி, ராஜா அண்ணனை இசையமைக்க சொல்ல, அவரோ முதலில் படத்தை எடுத்து வாருங்கள். பின்னர் இசை அமைக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இதையடுத்து படத்தை எடுத்து, ராஜா அண்ணனிடம் போட்டு காண்பித்தால், அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால், அந்தப் படத்தை ராஜ்கிரண் ரிலீஸ் செய்யவில்லை. காரணம், நான் மீண்டும் திரைத்துறையில் மேலே வந்து விடுவேன் என்று வேண்டுமென்றே அதனைச் செய்தார். இதுதான் நடந்தது. ஆகையால், ராஜ்கிரண் எனக்கு படம் கொடுக்கவில்லை. நான் தான் அவருக்கு இரண்டு படம் கொடுத்திருக்கிறேன். அவர் சில இடங்களில் அவர்தான் எனக்கு படம் கொடுத்ததாக சொல்லி இருக்கிறார். அது தவறாக இருக்கலாம்” என்று பேசினார்.