(6 / 6)‘’அடுத்து பெத்தராயுடு அப்படிங்கிற டைட்டிலை வைன்னு சொல்றார், ரஜினி. உடனே, நான் அதுக்கு முன்னாடி அப்படி டைட்டில் வைச்சு படம் ஓடலைன்னு சொல்றேன். உடனே, இல்லை வைன்னு சொல்றார். சரின்னு வைச்சாச்சு.ராஜமுந்திரியில் படம் எடுத்தோம். படத்துக்கு அந்த ஊர்க்காரங்க நிறைய ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி என்னோட இரண்டு படங்கள் தோல்வி. அப்போது கொஞ்சம் பணக்கஷ்டத்தில் இருக்கேன். சென்னையில் இருந்து ராஜமுந்திரிக்கு ட்ரெயினில் வருகிறார், ரஜினி. அப்போது ஒரு பையில் 45 லட்சம் எடுத்திட்டு வந்து கொடுக்கிறார், ரஜினி. எனக்குத்தெரியும் நீ கஷ்டத்தில் இருக்கேன்னு, படம் ஜெயிச்சதுக்கப்புறம் கொடுன்னு கொடுக்கிறார், ரஜினி. என்ன மனுஷன். எப்படிப்பட்ட நண்பன். சினிமா ரிலீஸ் ஆகி, சென்ஷேஷனல் ஹிட் ஆகிடுச்சு. கணவன் - மனைவி எப்படி இருக்கணும். அண்ணன் தம்பி எப்படி இருக்கணும் அப்படின்னு சொன்ன படம். இனி அப்படி ஒரு படம் எடுக்கமுடியாது’’ என முடித்தார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு. நன்றி: டெய்லி கல்ச்சர் யூட்யூப் சேனல்,