(3 / 5)முதலில் அவர் என்னிடம் காதலை சொன்ன பொழுது, நான் முடியாது என்று தான் மறுத்தேன்; உடனே அவர், ஏன் முடியாது முடியுமே என்றார். காதல் வீட்டிற்கு தெரிந்தது. பயங்கரமாக எதிர்த்தார்கள். ஆனால் நான் கல்யாணம் செய்தால் இவரைதான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். நேராக பூஜை அறைக்குச் சென்றேன். கடவுளிடம், என்னுடைய வாழ்க்கையில் நான் இப்படியான ஒரு முடிவை எடுக்கிறேன். என்னுடன் துணை நில் என்று கும்பிட்டுவிட்டு, அவரை கரம் பிடித்தேன்.