(5 / 5)ஜோடியான கோவை சரளாகோவை சரளாவை பொருத்தவரை, அவர் அப்போது பாக்யராஜ் படத்தில் நடித்திருந்தார். கமல் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் கோவை சரளாவிடம் வடிவேலுக்கு ஹீரோயினாக நடிப்பதற்கு கேட்க போனேன். அப்போது அவர், நான் பெரிய ஹீரோ படங்களில் நடித்து வருகிறேன். அப்படி இருக்கும் போது, வடிவேலு போன்ற ஒரு புதுமுக நடிகனுக்கு ஜோடியாக நடிக்கச் சொல்கிறீர்களே என்று கேட்டார்.இதையடுத்து நான் கோவை சரளாவிடம், அம்மா... இது ஒரு கணிப்புதான்; இவனிடம் நிறைய சரக்கு இருக்கிறது; இவன் பின்னாளில் பெரிய நடிகனாக, கருப்பு நாகேஷ் போல வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.ஆகையால் நீ இவனோடு இப்போது நடித்தால், உனக்கும் அடுத்தடுத்த படங்கள் கிடைக்கும் என்று கூறினேன். அவர் முதலில் ஒகே என்று சொல்லிவிட்டார். இதனையடுத்து கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட நடிகர்கள் கூட்டம் போட்டு, வடிவேல் உடன் கோவை சரளா நடித்தால், கோவை சரளாவுடன் இனி எந்த படங்களிலும் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டனர். இதை பார்த்து பயந்துவிட்ட கோவை சரளா, என்னிடம் நான் வடிவேலுவுடன் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் அவர்களை சமாதானம் செய்து, கோவை சரளாவிற்கு சம்பளத்தை அதிகப்படுத்தி, நாயாக அலைந்து திரிந்து, வடிவேலுக்கு ஜோடியாக கோவை சரளாவை மாற்றினேன் அப்படித்தான் அந்த ஜோடி உருவானது. அவர்கள் இடையான கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் உண்மையிலேயே இருவரும் காதலிக்க ஆரம்பித்து, கல்யாணம் வரை செல்ல சென்று விட்டார்கள். அதில் பெரிய தகராறும்ஏற்பட்டது.இதையடுத்து, காலமெல்லாம் வசந்தம் திரைப்படத்திலும் நான் வடிவேலுவை கமிட் செய்தேன் இதனை தெரிந்து கொண்ட செந்தில், வடிவேலு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி கவுண்டமணியிடம் சொல்லி விட்டார். இதையடுத்து கவுண்டமணி என்னிடம், கொஞ்சம் யோசி என்று சொல்லிவிட்டார். ஆனால் நான் அவரிடம், நான் வடிவேலுக்கு அட்வான்ஸ் கொடுத்து மேக்கப் டெஸ்ட்டை முடித்துவிட்டேன். இனிமேல் அவரை தூக்க முடியாது என்று கூறிவிட்டேன். இதையடுத்து கவுண்டமணி, செந்தில் அதிலிருந்து விலகிக் கொள்ள, பாண்டியராஜன் உள்ளிட்டோர் அதில் நடித்தனர். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது