(4 / 6)‘’இப்படி தங்கர் பச்சான் ஓவரா செய்வார். இதற்கப்புறம், 2002-ல் தென்றல் படம் பார்க்க, என் அப்பாவை ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் அழைக்கிறார். நானும் அப்பாவும் போயிருக்கோம். படத்தைப் பார்த்திட்டு அப்பா, தங்கர் பச்சானை பாராட்டுகிறார். அதன்பின், அப்பாவை வந்து மறுநாள் அலுவலகத்தில் பார்க்கும் தங்கர் பச்சான், தான் எழுதிய ’ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவலை அப்பா கையில் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதைப் பார்த்துட்டு அப்பா பாராட்டுகிறார்.அடுத்து மீண்டும் நேரில் வந்து பார்க்கும் தங்கர் பச்சான், எனது அப்பாவிடம் இதைப் படமாக்கணும் சார், இதை நீங்க தயாரிக்கணும்னு சொல்கிறார். உடனே, அப்பா வந்து ஓகே சொல்லிட்டார். அடுத்து சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரோகிணி எல்லாரும் முக்கிய நடிகர்களாக நடிக்கிற மாதிரி புக் பண்றாங்க. தங்கர் பச்சானுக்கு 65 லட்சம் ரூபாய் சம்பளம் பேசுறாங்க. ஏனென்றால், அழகி, சொல்ல மறந்த கதை இதெல்லாம் கொடுத்திருக்கிறார். மறுநாள் அவர் வீட்டில்போய், வெள்ளித்தட்டில் வைச்சு 15 லட்ச ரூபாய் கொடுக்கிறோம்.