தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kan Thirusti: கண் திருஷ்டி அடியோடு நீங்க வேண்டுமா? இதோ எளிமையான பரிகாரங்கள்!

Kan Thirusti: கண் திருஷ்டி அடியோடு நீங்க வேண்டுமா? இதோ எளிமையான பரிகாரங்கள்!

Jul 11, 2023, 06:06 PM IST

கண் திருஷ்டி விலகச் செய்ய வேண்டிய சில எளிமையான பரிகாரங்கள் பற்றி இங்கு காண்போம்.

  • கண் திருஷ்டி விலகச் செய்ய வேண்டிய சில எளிமையான பரிகாரங்கள் பற்றி இங்கு காண்போம்.
ஒருவரின் முன்னேற்றத்தைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொள்வதே கண் திருஷ்டி எனக் கூறப்படுகிறது. ஆன்மீகத்தின் படி கண் திருஷ்டி ஒருவரது வாழ்வில் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது.  
(1 / 6)
ஒருவரின் முன்னேற்றத்தைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொள்வதே கண் திருஷ்டி எனக் கூறப்படுகிறது. ஆன்மீகத்தின் படி கண் திருஷ்டி ஒருவரது வாழ்வில் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது.  (Pexels)
நமது வீட்டிற்குள் தீய சக்தி நுழையாமல் இருக்க, கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்களின் திருஷ்டி தாக்காமல் இருக்க வீட்டு வாசலில் பௌர்ணமி நாளில் நீர் பூசணி கட்டி தொங்க விட்டால் கண் திருஷ்டி விளகும் எனக் கூறப்படுகிறது. 
(2 / 6)

கண் திருஷ்டி நீங்க சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில், சிறிது ஏலக்காய், கிராம்பு, மூன்று அல்லது நான்கு கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும். அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் காட்ட வேண்டும். இதனைப் பரிகாரமாக அவ்வப்போது நம் வீட்டில் செய்து வந்தால் கண் திருஷ்டி விலகி நேர்மறை ஆற்றலும், தெய்வ சக்தியும் நம் வீட்டில் குடிகொள்ளும் என்பது ஐதீகம் ஆகும். 
(3 / 6)
கண் திருஷ்டி நீங்க சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில், சிறிது ஏலக்காய், கிராம்பு, மூன்று அல்லது நான்கு கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும். அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் காட்ட வேண்டும். இதனைப் பரிகாரமாக அவ்வப்போது நம் வீட்டில் செய்து வந்தால் கண் திருஷ்டி விலகி நேர்மறை ஆற்றலும், தெய்வ சக்தியும் நம் வீட்டில் குடிகொள்ளும் என்பது ஐதீகம் ஆகும். (Pexels)
கல் உப்பைக் கொஞ்சம் எடுத்து தலையில் மூன்று முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போட வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு வேஷ்டியில் ஒரு சிறிய துணியைக் கிழித்துத் திரி செய்து அந்த திரியைத் தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடது புறமாகத் தடவி அதனைச் சுவர் ஓரமாக வைத்து எரித்து விட வேண்டும். 
(4 / 6)
கல் உப்பைக் கொஞ்சம் எடுத்து தலையில் மூன்று முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போட வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு வேஷ்டியில் ஒரு சிறிய துணியைக் கிழித்துத் திரி செய்து அந்த திரியைத் தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடது புறமாகத் தடவி அதனைச் சுவர் ஓரமாக வைத்து எரித்து விட வேண்டும். (Pexels)
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷமும் நீங்குவதற்குத் தெருவில் இருந்து மண் கொஞ்சம் எடுத்து வந்து, கடுகு உப்பு 3 காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்த அமர்ந்து 3 முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும். இது கண் திருஷ்டியைப் போக்கும் என நம்பப்படுகிறது. 
(5 / 6)

வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிக்குக் கற்றாழை கட்டி தொங்க விடலாம். வாசலுக்கு மேல் ஒரு எலுமிச்சை, 5 பச்சை மிளகாய் என மாறி மாறி கயிற்றில் கோர்த்து தொங்கவிடலாம். இதனை செவ்வாய் கிழமைகளில் செய்யதால் நல்ல பலன் கிடைக்கும் 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை