(2 / 7)எளிய, தெளிவான மொழி - குழந்தைகள், நேரடியான மற்றும் தெளிவான மொழிகளில் அவர்களின் எல்லை எதுவென்று தெரிந்துகொள்ளவேண்டும். எனவே அவர்களின் வயதுக்கு ஏற்ற வார்த்தைகளை அவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். எனவே அவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டியது ‘இல்லை’ என்று சொல்வதை, அனைவருக்கும் அதைச் சொல்ல உரிமை உண்டு என்பதை எளிமையாக அவர்களுக்க உணர்த்தவேண்டும். நல்ல தொடுகை, கெட்ட தொடுகை எது என்பதை அவர்களுக்கு விளக்கவேண்டும். அவர்களுக்கு அசௌகர்யமாக உள்ள எந்த தொடுகையும் கெட்ட தொடுகைதான். பல்வேறு வகை எல்லைகள் என்ன என்று கூறுங்கள். உடல், உணர்வு, டிஜிட்டல் என எல்லைகளை விரிவாக்குங்கள். உங்கள் உடல் உங்களுடையது. அதை யார் தொட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.