தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  National Girl Child Day 2024: பெண் குழந்தைகளுக்கு உதவிகரமாக இருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் இத்தனை உள்ளதா?

National Girl Child Day 2024: பெண் குழந்தைகளுக்கு உதவிகரமாக இருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் இத்தனை உள்ளதா?

Jan 24, 2024, 05:32 PM IST

தேசிய பெண் குழந்தைகள் நாளான இன்று பெண் குழந்தைகளுக்கென மத்திய அரசு சார்பில் இருந்து வரும் சேமிப்பு, பொருளாதார திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

  • தேசிய பெண் குழந்தைகள் நாளான இன்று பெண் குழந்தைகளுக்கென மத்திய அரசு சார்பில் இருந்து வரும் சேமிப்பு, பொருளாதார திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் நாள் ஜனவரி 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு கல்வி, சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அவர்களின் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை ஊக்கப்படுத்தும்  விதமாக இந்த நாள் அமைகிறது. இந்த நாளில் பெண் குழந்தைகளின் சமத்துவம், கண்ணியத்தை வலிறுத்துவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது
(1 / 6)
ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தைகள் நாள் ஜனவரி 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு கல்வி, சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அவர்களின் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை ஊக்கப்படுத்தும்  விதமாக இந்த நாள் அமைகிறது. இந்த நாளில் பெண் குழந்தைகளின் சமத்துவம், கண்ணியத்தை வலிறுத்துவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது(Reuters)
சுகன்யா சம்ரிதி யோஜனா: இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுக்கும் பெற்றோர்கள் அவர்களின் பிறப்பு முதல் 10 வயது வரை அஞ்சல் நிலையத்தில் கணக்கு தொடங்கி பணம் சேமிக்கலாம். குறைந்ததது ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை ஆண்டுக்கு பங்களிப்பை தரலாம். பெண் குழந்தைக்கு 21 வயதாகும்போது இந்த கணக்கு முதிர்ச்சி அடையும். பெண் குழந்தைக்கு 18 வயதாகி திருமணம் அடைந்த பிறகு முதிர்ச்சி அடைகிறது. இந்த திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாற்றி அமைக்கிறது
(2 / 6)
சுகன்யா சம்ரிதி யோஜனா: இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுக்கும் பெற்றோர்கள் அவர்களின் பிறப்பு முதல் 10 வயது வரை அஞ்சல் நிலையத்தில் கணக்கு தொடங்கி பணம் சேமிக்கலாம். குறைந்ததது ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை ஆண்டுக்கு பங்களிப்பை தரலாம். பெண் குழந்தைக்கு 21 வயதாகும்போது இந்த கணக்கு முதிர்ச்சி அடையும். பெண் குழந்தைக்கு 18 வயதாகி திருமணம் அடைந்த பிறகு முதிர்ச்சி அடைகிறது. இந்த திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாற்றி அமைக்கிறது(UNSPLASH)
உடான் சிபிஎஸ்இ உதவித்தொகை திட்டம்: சிபிஎஸ்இ என்று அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த முயற்சியானது மதிப்பு மிக்க பொறியியல் கல்லூரிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வி மற்றும் பொறியியல் நுழைவு தேர்வுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வாரியத்தின் அரசுப் பள்ளிகள் அல்லது இந்தியாவில் உள்ள சிபிஎஸ்இ கல்வித்திட்டத்தில் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் 11ஆம் வகுப்பில் உள்ள பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். தகுதி அடிப்படையிலான இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண் தேவைப்படுகிறது. X மற்றும் CGPA போர்டுகளுக்கான அறிவியல் மற்றும் கணிதத்தில் 80% அல்லது அறிவியல் மற்றும் கணிதத்தில் 9 GPA உடன் குறைந்தபட்ச CGPA 8 பெற்றிருக்க வேண்டும்
(3 / 6)
உடான் சிபிஎஸ்இ உதவித்தொகை திட்டம்: சிபிஎஸ்இ என்று அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த முயற்சியானது மதிப்பு மிக்க பொறியியல் கல்லூரிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வி மற்றும் பொறியியல் நுழைவு தேர்வுகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வாரியத்தின் அரசுப் பள்ளிகள் அல்லது இந்தியாவில் உள்ள சிபிஎஸ்இ கல்வித்திட்டத்தில் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் 11ஆம் வகுப்பில் உள்ள பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். தகுதி அடிப்படையிலான இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண் தேவைப்படுகிறது. X மற்றும் CGPA போர்டுகளுக்கான அறிவியல் மற்றும் கணிதத்தில் 80% அல்லது அறிவியல் மற்றும் கணிதத்தில் 9 GPA உடன் குறைந்தபட்ச CGPA 8 பெற்றிருக்க வேண்டும்(Instagram/@yourclicks_ (File Photo))
பெண்கள் இடைநிலைக் கல்விக்கான தேசிய ஊக்குவிப்பு திட்டம்: மே  2008 முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம்,  மேல்நிலை பள்ளிகளில் SC/ST சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் சேர்க்கையை ஊக்குவிக்கவும், இடைநிறுத்தம் விகிதத்தை குறைக்கவும், 18 வயது வரை அவர்கள் படிப்பை தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்கத்துடன், ஒன்பதாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரூ. 3 ஆயிரம் தகுதியான திருமணமாகாத பெண்களின் பெயரில் அவர்கள் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தவுடன் நிலையான வைப்புத்தொகையாக டெபாசிட் செய்யப்படுகிறது. அவர்கள் 18 வயதை அடைந்ததும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் வட்டியுடன் தொகையை திரும்பப் பெறலாம்
(4 / 6)
பெண்கள் இடைநிலைக் கல்விக்கான தேசிய ஊக்குவிப்பு திட்டம்: மே  2008 முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம்,  மேல்நிலை பள்ளிகளில் SC/ST சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் சேர்க்கையை ஊக்குவிக்கவும், இடைநிறுத்தம் விகிதத்தை குறைக்கவும், 18 வயது வரை அவர்கள் படிப்பை தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்கத்துடன், ஒன்பதாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரூ. 3 ஆயிரம் தகுதியான திருமணமாகாத பெண்களின் பெயரில் அவர்கள் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தவுடன் நிலையான வைப்புத்தொகையாக டெபாசிட் செய்யப்படுகிறது. அவர்கள் 18 வயதை அடைந்ததும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் வட்டியுடன் தொகையை திரும்பப் பெறலாம்(File Photo)
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ: ஜனவரி 22, 2015இல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் மற்றும் வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான சவால்களை சமாளிப்பதற்கான திட்டமாக இது உள்ளது
(5 / 6)
பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ: ஜனவரி 22, 2015இல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் மற்றும் வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான சவால்களை சமாளிப்பதற்கான திட்டமாக இது உள்ளது
பாலிகா சம்ரிதி யோஜனா: வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ. 500 குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படுகிறது. அத்துடன் அவரது கல்விக்காக, கூடுதல் வருடாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது
(6 / 6)
பாலிகா சம்ரிதி யோஜனா: வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ. 500 குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படுகிறது. அத்துடன் அவரது கல்விக்காக, கூடுதல் வருடாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது(PTI)
:

    பகிர்வு கட்டுரை